Monday, December 26, 2011

பிராத்தனையின் இசை (பாகம் - 2)

This Article published in e-magazine "Uyirosai"(uyirmmai publications)26-12-2011 issue
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5126

பிராத்தனையின் இசை- சூஃபி இசைமீதான ஓர் எளிய அணுகல்
  இந்த வாரம் ஹிந்தி திரைபடங்களில் மட்டுமல்லாது, தமிழ் மொழியின் வழியான சூஃபிஇசையின் வடிவங்களையும் அதன் மூலங்களையும்
 சற்று  பார்க்கலாம்.


 2009 -ல் ராகேஷ்  ஓம்பிரகாஷ் மெஹ்ரா வின் டெல்லி-6 படத்தின்"அர்ஸியான்"
என்ற பாடலை கைலஷ்கர் , ஜாவித் அலி, குரலுடன் தபலா வும் ஹார்மோனியமும்
கூ ட்டணியிட்டு சூஃபி பாடல் கேட்பை கொண்டாட்டமாக மாற்றினர். ( பாடகர் கைலஷ்கரின் ஆளுமை பற்றி  என் வலைபக்கத்தில்  சிறு பதிவிட்டிருக்கிறேன். http://bhilalraja.blogspot.com/2010/11/kailash-kher.html  )
ரஹ்மான் இசையமைத்த மிக நீண்ட பாடல்களில் இதுவும் ஒன்று (8 .50 நிமிடங்கள்).



ARZIYAN - http://www.youtube.com/watch?v=McYnZj-EvL4
          சில மசூதி மற்றும் தர்காகளில் தொழுகை முன்னறிவிப்பிற்கு  முன் பெரிய முரசு கொண்டு ஒலி எழுப்பக்கேட்டிருக்கிறேன்.  அத்தகைய முரசொலியின்  தாள பின்னணியில்  Bose: The Forgotten Hero (2005)  படத்தில்  ரஹ்மான் தன் குரல் மற்றும் தாளம் கொண்டு உருவாகிய "ZIKAR " என்ற பாடல் மிக அபூர்வமானது.


  
ZIKAR -  http://www.youtube.com/watch?v=XQtE6JQGjlI&feature=related
"மங்கள் பாண்டே" படத்தின் இசை தொகுப்பில் உள்ள பிரபலம் அடையாத  "Al Maddath Maula "  என்ற பாடலும் இறைநேசர்களின் அடக்கஸ்தலம்  என்றழைக்கப்படக்கூடிய தர்காக்களின் பின்னணியில் அமைந்தது.

Al Maddath Maula  -http://www.youtube.com/watch?v=QkK84M6lg5E


      இந்திய இசையின் நவீனத்திற்கும்,தொழில்நுட்பத்திற்கும்அடையாளமான 
ரஹ்மான், தான் இசையமைத்த நேரடியான சூஃபி பாடல்களுக்கு எளிமையாக   சூஃபி பாரம்பரிய இசைக்கேயுரிய தபலா, நரம்பிசை மற்றும்  ஹர்மோனியதிற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்காரணம், அவர் சூஃபி இசை மரபை சரியாக  உள்வாங்கி/உணர்ந்திருப்பதால்தான்.
சினகிதனே...(அலைபாயுதே), என்னுயிரே., (உயிரே), therbina ...(குரு)  இவைகளின் மூலமும் சுபி இசைதான், ஆனால் இந்திய சினிமா சம்பவங்களுக்கு பொருந்தும்படி உரு(இசை) மாற்றம் செய்திருப்பார்.

ரஹ்மானிடம் தற்போது  சராசரி சினிமா பாடலுக்கான  புனைவுப்புதுமை குறைந்திருந்தாலும் சமீபத்தில் வெளிவந்த ROCKSTAR படத்தின்  "குன் பாய குன்", பாடல்  ஜாவேத்  அலி,    மொஹித் சாஹன், ரஹ்மான் குரலில் சூஃபி இசை வரிசையில்  தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது .
இந்த பாடலை டெல்லியில் ஒருநேரடி மேடை நிகழ்சியில் ரஹ்மான் குழுவினரோடு பாடும் கண்ணொளி கீழ் காணும் சுட்டியில் ரசிக்கலாம்.





இக்கட்டுரையில் இதுவரையிலான களமும்,சூஃபி பாடல்களும்  வடஇந்தியா  மற்றும் இந்துஸ்தானி இசையின் கலாச்சாரத்தில் நிலைகொண்டவை,
தென்பகுதியிலும், தமிழகத்திலும் சூஃபிதுவம் பரவியபோது, அதனுடன் இசையும் வளந்தது குறிப்பாக தமிழகத்தில் நாகூர், மதுரை பகுதியில் சூஃபி த்துவங்களையும், சூஃபி  கலைஞர்களின் வாழ்வை இசை வடிவில் பாடி யாசிக்கும் பஃக்கீர் என்ற பிரிவினர் வசிக்கின்றனர். சூஃபி கலைஞர்களின்
நினைவிடங்கலான தர்காக்கள்தான் இவர்களின் இசை மற்றும்  வாழ்வியல்  மையங்கள்.(சுஃபி பாதைகளை குறிக்கும்  "தரிக்கா" என்ற சொல்லிலிருந்து
 உருவானது தர்கா என்ற சொல்).  இவர்கள் பெரும்பாலும் பச்சை நிற தலைப்பாகையுடன்(உருமாகட்டு) கையில் தாயிரா என்ற தோல் இசை கருவிகொண்டுபாடியபடி  தெருக்களில் யாசிப்பதுதான் இவர்கள் தொழில். சமுகத்தில் பெரும்பான்மை /வைதிக இஸ்லாம் சார்பாளர்கள் சூஃபியிசத்தை
பின்பற்றுபவர்களை  ஒருவித எதிர்ப்புணர்வுடன் அணுக காரணம், இவர்கள் இஸ்லாத்தின்  முக்கிய கடமைகளில் ஒன்றான தொழுகையை காட்டிலும்,
ஜியாரத், திஃக்ர்  போன்ற ஆழ்நிலை தியான வழிபாட்டில் ஆர்வம்கொண்டவர்கலாக
இருப்பதுதான். தமிழ்நாட்டை பொறுத்தவரை பஃக்கீர்களின் பாடல்களில் முக்கிய பாடுபொருள் சூஃபியிசதின் முனோடியாக கருதப்படும் அப்துல் காதர் ஜிலானி, மற்றும் நாகூர் சாகுல் ஹமிது இவர்களின் வாழ்வும், அற்புதநிகழ்வுகளும்தான்.  தமிழ்நாட்டில் முக்கிய ஆன்மிக தளமான நாகூர் தர்காவில் அடங்கியுள்ள சாகுல் ஹமீது முகம்மது நபியின் 23 -ம் பரம்பரரையை  சேர்ந்தவர்,  உ.பி.யில் மாணிகபுரில்  புலம்பய்ர்ந்து  வாழ்ந்த பெற்றோருக்கு மகனாக  பிறந்து கிழக்காசிய நாடுகளில் நீண்ட பயணம் செய்தபின் சவுதியிலிருந்து  கேரளா வழியாக தமிழகத்தின் கடற்கரை நகரான நாகூர் வந்து சேர்ந்தார்.  பல அற்புதங்களை நிகழ்த்தியவரென்று  சொல்லப்பட்டாலும்  தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்ப நாயக்கரை கடும் பிணியிலிருந்து காப்பாற்றியதால் இப்போதுள்ள தர்காவும் அதன் பகுதிகளும் இந்த சூஃபி ஞானிக்கு தஞ்சை அரச வம்சத்தல் எற்படுதிக்கொடுக்கப்பட்டது. இந்தகைய நாகூரின் பின்னணியில் சமீபத்தில் இணையத்தில்கேட்க நேர்ந்த அப்துல் கனி,அஜாஹ் மைதீன்,  சபுர்மைதீன் பாபா சபீர்
என்ற மூவரின் குரலில் இந்த எளிய   மற்றும்  அற்புதமான பாடல்களை கேளுங்கள், தமிழகத்தில் பஃக்கீர்களால் பாடப்படும் பாடல்கள் எந்த சம்பிரதாய அல்லது மரபியல் இசை வடிவிற்கும் கட்டுப்படாத எளிய நாட்டுப்புற இசையை போன்றது.
(இதுவரை இந்த கட்டுரையில் நான் குறிப்பிட்ட மற்ற பாடல்களை
கேட்காவிட்டாலும், கீழ் குறிப்பிடும் பாடல்கள் தவறவிடவேண்டாம்)



http://www.youtube.com/watch?v=wXfPFxfy7ZM&feature=related


http://www.youtube.com/watch?v=VJH8rYn-ERY&feature=related

இவ்வகை பஃக்கீர்களின் இசை பாடலை இணையத்தில்மட்டுமல்லாது நேரடியாகவும் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர்களின் வாழ்வு
வறுமையில் நிலைகொண்டிருந்தாலும்,  இசைக்கத்துவங்கியதும்,  அவர்கள்   கண்களின்  வழி நம்பிக்கை மட்டுமே  இசையையும்  மீறி வழிகிறது. 

இக்கலைஞர்களின்    அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய பிராத்தனையிசையில்   சரணடையும்  நோக்குதான்,  எந்தவித சிறப்பு இசை பயிற்சியும், குரல் வளமும் இல்லையென்றாலும் நம்மை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது.

யா. பிலால் ராஜா.

Monday, December 19, 2011

பிராத்தனையின் இசை (பாகம் - 1)

This Article published in literary e-magazine "Uyirosai"(uyirmmai publications)19-12-2011 issue
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5107

பிராத்தனையின் இசை- சூஃபி இசைமீதான ஓர் எளிய அணுகல்

   
தமிழகத்தில் சினிமா பாடல்கள் தவிர்த்த பிரபலமான  மாற்று இசை  என்று தேடினால் பக்தி பாடல்களை மட்டும்தான் பட்டியலிட முடியும் . அதிலும் கடந்த 30 வருடங்களில் T .M.S , மற்றும்  நாகூர் E .M . ஹனீபா இந்த இருவரின் பாடல்கள் இந்து, இஸ்லாமிய விழாக்களில் தவிர்க்க முடியாத  ஒலி நாடாக்களாக  இருக்கும். மத நம்பிக்கை கடந்து மட்டுமல்ல, மத நம்பிக்கையை துறந்தவர்கள் கூட இன்றுவரை ரசிக்கும் பாடல்கள் இவர்களுடையது. இந்த கட்டுரை எனக்கு கட்டயமானதற்கு காரணம், ஊரில் சிறுவயதில்  விழாக்களில் கேட்கத்துவங்கிய தமிழ்  இஸ்லாமிய பக்தி பாடல்கள் பின்பு இசையமைப்பாளர் ரஹ்மானின் சூஃபி இசை  பாடல்களின் செவிவழிப்பின்தொடரலாக என்னை ஒரு அபாரமான சுஃபி இசை வடிவத்தின் ரசிகனாக்கி இருக்கிறது. புத்தத்தில் ஜென் தத்துவங்களைபோல, போல இஸ்லாத்தில் சூஃபித்துவமும்  சுதந்திரமானது, இறைநிலை உணர்வுக்கு எந்த சம்பிரதாயங்களையும் கட்டாயப்படுதுவதிலை,  இயற்கை மீதான பார்வைக்கும், சுய சிந்தனைக்கும் ,
சம்பிரதாயங்களை கடந்தமனிதநேயத்திற்கும் முழு சுதந்திரம் கொடுப்பதுடன்,
இயற்கையையும், அன்பையும் இறை-வழியாக கொள்ளபடுவதால் அதில் வெளிப்படும் கலையும் அன்பும், பணிவுமாக மத வேறுபாடின்றி  அனைவரையும் ஆட்கொள்கிறது, மதிய கிழக்கு  ஆசிய நாடுகளை  பிறப்பிடமாக கொண்ட சூஃபி  இசைக்கான சிறிய  அறிமுகமாக இந்த கட்டுரையில்  ரஹ்மானின்  சில பாடல்களை மட்டும் அறிமுகம் செய்கிறேன். முன்னதாக சூஃபியிசம் பற்றி ஒரு சிறிய அறிமுகம், ஏழத்தாழ 10 -ம்  நுற்றாண்டில் வைத்திக இஸ்லாத்தின் சம்பிரதாய சடங்குகளை தவிர்த்து மெய்ஞான  தேடலாக  உருவானவர்கள்  சூஃபிகள்.  பொதுவாக இஸ்லாம் துறவு பற்றி போதிப்பதில்லை, ஆனால் அதிகப்படியான இறைக்காதலால்
துறவு நிலையில் வாழ்ந்த சூஃபி   மெய்ஞானிகளும் உண்டு.  அதேபோல்  இசை/ நடனம்/கவி புனைவை அடிப்படை இஸ்லாம் ஆதரிப்பதில்லை, இதற்கு காரணம் என்ன என்று சிலரிடம் கேட்டேன், அதற்கு அவர்கள் இது போன்ற கலைகள்/படைப்புகள் உண்மை  மற்றும்  வரலாற்றை அதிகப்படியான கற்பனைகள் கலந்து அதன் நோக்கை  திசைமாற்றி  விடுமென்பதால்  இஸ்லாத்தின் அடிப்படைவாதத்தில் இவைகளுக்கு  ஊக்கமளிப்பதில்லை என்றார்.  ஆனால் சூஃபியிசத்தில் கலைகளின் வாயிலாக இறைவன்/இயற்கையிடம் சரணடைதல் முக்கிய நிகழ்வாகிவிடுகிறது.  இன்னும் சொல்லபோனால் இது ஒரு வகை கூட்டு
வழிபாடு  போன்றது.  ( உண்மையில் சூஃபி , க்ஃவ்வாலி இசை பற்றி விரிவாக சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும் இந்த கட்டுரை தொடரின் வடிவம் போதாது என்பதால், சிறிய அளவில், என்னால் ஆனவரை முயற்சிக்கிறேன்.)

பள்ளி செல்லும் வயதில், சில காலம் என் தந்தைக்கு உதவியாக அதிகாலை 5 மணிக்கு கடை திறந்து தினசரி பத்திரிக்கை விற்பனை தொடங்கும்போது, எதிர்புறம் திருமணமண்டப வாசலில் வைக்கப்பட்ட ஸ்பீக்கர் ரிலிருந்து TMS ன் பக்திபாடல்கள் ஒலிக்கும். விடிந்து கொண்டிருக்கும் அதிகாலை, கடைகளில்  வாசல்  தெளிப்பதால்  கிளம்பும்  மண்வாசனை, பால் வண்டிகாரர்களின் மணி சத்தம்( பாக்கெட் பால் கலாசாரம் பரவாத 90 ' களின் மத்தி), தினசரி நாளிதழ் கட்டை பிரிப்பதால் கிளம்பும் பேப்பர் வாசனை, ஒன்றிரண்டாக கூடும் ஆள் நடமாட்டம், வசந்த பவனில் வாங்கிய காபி வாசனை, இவைகளுடன் TMS ன் குரலும் சேரும்போது  கிடைக்கும்  புத்துணர்வு உழைப்பின் களைப்பை மறக்க செய்யும்.
இதே அலைவரிசைக்கு  என் மனதை  ஈர்ப்பது  எங்கள் பகுதியில் இஸ்லாமிய  விழாக்களில்  ஒளிபரப்பாகும்  நாகூர்  E M .  ஹனிபாவின்  பாடல்கள். எல்ல கலை படைப்புகளும்  கலைஞர்களும் கண்ணுக்குத்தெரியாத கால வட்டத்திற்கு உட்பட்டவைதான், சில மட்டும்தான் காலம் கடக்கும் கால்கள் கொண்டிருக்கும், தமிழ் பக்திபாடல் இசை சுழலில் T M S., மற்றும் நாகூர்  E . M . ஹனிபாவின் குரலுக்கு அத்தகைய கால்கள்
உள்ளதாக கருதலாம். தமிழகத்தில் இன்று வரை இஸ்லாமிய  விழாக்களில் ஹனிபாவின் பாடல்கள் தவிர்கமுடியாதது, காரணம் இவருக்கு பின் அந்த இடத்திற்கான தனித்துவ குரல்கொண்ட பாடகர்களும் பாடல்களும் கிடைக்கவில்லை.  இவர்களின் குரல் வள ஆளுமைதான் அபரமும் தனித்தன்மையும் கொண்டிருந்ததே தவிர பெரும்பாலான பாடல்களின்
மெட்டமைப்பும், இசையும், ஒலிபதிவு தரமும்   ஆர்கெஸ்ட்ரா  குழுக்களின் தரத்தில்தான் இருந்தன, இந்திய அளவில் சென்றிருக்க வேண்டிய இவர்களின்  குரல் ஆளுமை  தமிழகத்தின் 234 தொகுதிகளை
தாண்டவில்லை, அதுமட்டுமல்ல  நாகூர்  E .M   ஹனிபாவின் பாடல்கள் தமிழ் மற்றும் ஹிந்தி சினிமா பாடல் மெட்டுக்களின்இனத்தில் எளிதில்  சேர்வதுதானே தவிர முழுமையான  சூஃபி / க்ஃவ்வாலி  இசை வகையல்ல. (ஹனிபாவின் குரல் சினிமாவில் இளையராஜாவால் செம்பருத்தி , ராமன்அப்துல்லா ஆகிய இரு  படங்களில் பயன்படுத்தப்பட்டது.) இவைகளுக்கு பின் இஸ்லாமிய பக்தி பாடல்களின் வேறெந்த புது வடிவத்தையும், வகையினையும் கேட்காத நாட்கள் சென்றுகொண்டிருந்தன, சிறு வயதில்   படித்தலின் வாயிலாக சூஃபி, சூஃபிஇசை, போன்ற   வார்த்தைகளை பத்திரிகைகளில்  படித்திருக்கிறேன் ஆனால் அவைகளை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வமோ , வாய்போ இல்லை. அதுவரை பாடல்களை  "கேட்டு " மட்டுமே பழகியிருந்த எனக்கு    ரஹ்மானின் இசை வருகைகு பின்  பாடல்களையும் இசையையும் கவனித்து
உள்வாங்கும் ஆர்வம் அதிகரித்தது. அப்போது ஒரு வார இதழில் "FIZA " என்ற இந்தி படத்தில் ஒரேஒரு பாடலுக்கு மட்டும் ரஹ்மான் இசை என்றும், மற்ற பாடல்கள் அனுமாலிக் இசை என்றும் படித்ததும் ஆச்சர்யமாக இருந்தது காரணம்,  இந்திய சினிமாவில் ஒரு முன்னணி இசையமைப்பாளர் இசைத்த படத்தில் மற்றொருவர் இணைவது அபூர்வம்
அதிலும் அனுமாலிக், ரஹ்மானின் இசையை காப்பியடித்து தன பெயரை
போடுக்கொள்வதாக பரவலான குற்றச்சாட்டுக்கு ஆளானவர், அவர் மீது வழக்கு போடுவீர்களா?  என மீடியாக்கள் மைக்கை முன் நீட்டியபோது புன்னகையை மட்டும் பதிவு செய்தவர், இந்த படத்திற்கு  இசைய காரணம், அது ஒரு சுஃபி இசை வடிவத்திற்கான களம் என்பதாலும் ரஹ்மான்            அந்த இசை வடிவத்தில் ஆர்வம் கொண்டவரென்பதாலும் அப்பட இயக்குனரின் வேண்டுதலால் ஒப்புக்கொண்டதாக ஒரு பத்திரிகையில் படித்தேன். (ரஹ்மானின் இத்தகைய பெருந்தன்மையும், குணமும்தான் உலகின்
அனைத்து இசைவகைகளையும் உள்வாங்கவும் , அதிலிருந்து  புது பரிணாமத்துடன்
 தனக்கான நவீன இசையை உருவாக்கவும் காரணமாய் அமைகிறது.)
"FIZA " பாடல் கேட்க ஆர்வம் பற்றிக்கொண்டது, இப்போது இருப்பது போல் அந்த சமயத்தில் எங்கள பகுதில் கம்ப்யூட்டர், இன்டர்நெட், டவுன்லோட் சமாச்சாரங்கள் பரவவில்லை.  என் நண்பர் ஒருவரின்  மியூசிக்கல்ஸ்-ல் சொல்லி  வைத்து  ஒரு  காசெட்டில்  பதிந்து வாங்கினேன்   அதுவும் ஹிந்தி பாடல் என்றால் வெளிவந்து ஒருமாதம் கழித்துதான் கிடைக்கும், பின் என் நண்பன் ஒருவனின் வீட்டில் சோனி பிளேயர்ல் காசெட்-ஐ  ஒலிக்க விட்டேன்,  நேரமும்,  ஒலி நாடவும்  நகர,நகர  அதுவரை  இஸ்லாமிய பக்தி பாடல் என்றால்  வழக்கமாக  எதிர்பார்த்து  வைத்திருந்த    இசை பிம்பம் காற்றில் கரைந்து, புதுமையான தாளமும், குரலும் இசை கோர்ப்பும் ஒரு புது கேட்பனுபவத்தை தந்தது.
படத்தின் சூழல் ஜெயாபச்சன் தொலைந்து போன தன் மகன் ஹ்ரித்திக் ரோஷன்-ய் தேடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் மும்பையில் உள்ள புகழ் பெற்ற ஹாஜி அலி தர்காவிற்கு வரும்போது இந்த பாடல் தொடங்கும்.  இந்த பாடல்  காதர் குலாம் முஸ்தபா , முர்த்சா குலாம் முஸ்தபா , ஸ்ரீநிவாஸ் மற்றும்   ரஹ்மானால் பாடப்பட்டது. இந்த  பாடலுக்கான சூழல் வழக்கமான இந்திய சினிமாவில்  சோகமான பாடல்
 களம் ஆனால் இந்த பாடல்  எந்த துயரத்தையும்  மாற்றக்கூடிய நம்பிக்கைகளை இசைக்கிறது. 15 ம் நுற்றாண்டில் வாழ்ந்த  "சய்யத் பீர் ஹாஜி அலி ஷாஹ் புக்ஹாரி"  சூபியால்(பெரும் வணிகராக வாழ்ந்தவர்)   மும்பையில்   உருவாக்கப்பட்ட  இந்த  வணக்கஸ்தலம்  கடற்கரையிலிருந்து  பல மீட்டர் தூரம் தனித்து கடலில் அமைந்திருக்கும்,  இவ்விடத்தை சென்றடைய சிறு நடைபாதை ஒன்று  மட்டும் உள்ளது. கீழ் காணும் கண்ணோளியில்/ இணைப்பில் இந்த பாடலை கேளுங்கள். (இந்த கட்டுரையில்  குறிப்பிடப்படும்  பாடல்களையும் நிச்சயம் ஓய்வான இரவு தனிமையில், ஹெட் போன் அல்லது மியூசிக்சிஸ்டம்  கொண்டு  மொழி,  மதம்  மீதான  நம் முன்முடிவுகளை  சற்று மறந்துவிட்டு  கேட்டுப்பாருங்கள்).



 பொதுவாக  சூபி வகை பாடல்களில் தபலா, ஹார்மோனியம், தாயிரா, டோல் போன்ற வாத்தியங்கள் தான் அதிகமாக பயன்படும், இந்த பாடலிலும் அவைகள் தான் ஆனால் அவைகளின் நுண்ணிய இசை கோர்வையும்,  புதுமையான மெட்டும்  பாடகரின் குரலும் சூபி  இசையின் நவீனத்துவ தலைமுறையை துவக்கிவைகிறது. இந்திய இசையில் தபலாவின் இசை முக்கியமானது, எண்ணற்ற இந்திய சினிமா பாடல்களில் தபலா  தாளங்களை கேடிருந்தாலும்   இந்த கட்டுரை தொடரில் குறிபிடப்படும்
ரஹ்மானின் 4 சூபி வகை பாடல்களின் தபலாவின் தாளங்களை  கவனித்து பாருங்கள், மிக நேர்த்தியாக, ஒவ்வொருஒலியும்
நுட்பப்புதுமையில் கட்டமைக்கப்பட்டிருகும். அடுத்து வரும் 4 ரஹ்மானின் சூஃபி இசை பாடல் வரிகளின்  ரசனையான தமிழ் மொழி பெயர்ப்பை ராஜேஷ் என்பவரின் http://www.karundhel.com/2011/10/blog-post_10.html  தளத்தில் படிக்கலாம்)

  இதுபோன்ற சூஃபித்துவ பாடலுக்கான சூழல் இந்திய சினிமாவில் அமைவது அபூர்வம், அதிலும்  அபாரமானது ரஹ்மான் தனக்கு கிடைத்த இது போன்ற சில வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டதுதான்.  அதன் பின் ஆசிய முழுதும் பெரும் செல்வாக்கு பெற்றிருத்த நஸ்ரத் பதே அலிகான் , ஆபிதா பர்வின், கைலாஷ் கெர், JUNOON Band (இந்த  குழுவின்  சூஃபி  பாடல்கள்  ராக்  இசை வடிவில் இருக்கும்)  பாடல்களை அதிகம் கேட்டுக்கொண்டிருந்தேன். 2008 ல் வெளிவந்த "ஜோதா அக்பர்" திரைப்படத்தின் பாடல்களை கேட்டபோது மீண்டும் ஒரு அற்புதம் "கரீப்நவாஸ்"  பாடல்.  இதற்கு  பின்  இன்னும்  இரண்டு சூஃபி இசை  பாடல்கள் ரஹ்மானால்  உருவாகப்பட்டாலும் இது தான் அவரின் படைப்பாற்றலின் உச்சம்.  எனக்கு கற்பிதம்  செய்யப்படும்  கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லைஎன்றாலும், என்னில்   எப்பொழுதெல்லாம்  துன்பமும், வெறுமையும், செருக்கும் , குரோதமும்,    வெறுப்பும் உணருகின்ரேனோ, இந்த பாடலை அந்த இரவில் கேட்டல் அனைத்தும்
 வடிந்து விட உணர்ந்திருகின்றேன். பாடல் பார்க்கும்முன் அதன் சூழலை பார்த்துவிடலாம்.  இந்தியாவின்  முக்கிய முஹலாய மன்னரான  அக்பர், சுபிதுவத்தின் மீது பற்றுகொண்டவர், தனது திருமணத்திற்கு முன் ராஜஸ்தானில் உள்ள புகழ் பெற்ற  அஜ்மீர்  "ஹாஜா  மொயனுட்டின் சிஷ்டி"  தர்காவிற்கு செல்கிறார், அங்கு ஓய்வான இரவு அமர்வில் இப்பாடல் பாடப்படுகிறது. ஹாஜா  மொயனுட்டின் சிஷ்டி  என்ற சூபிஞானி   11-ம் நுற்றாண்டில் ஈரானில் பிறந்தவர் இஸ்லாத்தின் முக்கிய  மெய்ஞானியாக  கருதப்பட்ட இவர்தான்  இந்தியாவில் சூஃபியிசம்  உருவாக  காரணமானவராக அறியப்படுகிறார்.  சுபியிசதில்  முக்கிய  உட்பிரிவுகள்  தரிக்கா என்றலைக்கப்படுகிறது (தரிக்கா என்றால் "பாதை" என
பொருள்படுகிறது ) இவர் பிரபலபடுத்திய காதரிதாரிகா சுபியிசத்தில்
 இசையும் ஒரு வரைமுறைக்குட்பட்ட நடனமும் கூட்டு  வழிபாட்டின்  முக்கிய நிகழ்வு, இதற்கு  ஸாம என்ற பெயருமுண்டு,   வலது  கை  மேல்புறம்  நோக்கியும்,  இடது கை பூமி நோக்கியும் வைத்துகொண்டு, இடது  பாதத்தை  நிலத்தில்  பதித்து,   வலது   பாதத்தால்  கடிகாரஎதிர் சுற்றில்   சுழன்று ஆடும் இந்த நடனம் உடலையும் மனதையும்
ஒரு வித மோன நிலைக்கு அட்படுத்தக்கூடியது. புகழ்பெற்ற பெர்சிய சூஃபி கவிஞர் ஜலாலுதீன் ரூமி (1207 - 1273 ) இத்தகைய நடன நிலையில்
இறையுணர்வுக்கு ஆட்படுவதில் விருப்பம் கொண்டவராயிருந்தார். கீழ் காணும் "கரீப் நவாஸ்" பாடலின் இறுதியில் அந்த நடனத்தை பார்க்கலாம்.



கரீப் நவாஸ் - http://www.youtube.com/watch?v=nt93yH689Dg

தமிழகத்தில் இதன் வகை சேர்ந்த இசை கலாச்சரம் பற்றியும் இன்னும் சில பாடல்கள் பற்றியும் அடுத்த வாரம் பார்(கேட்)க்கலாம்.


.


Monday, October 24, 2011

ஆதாமின்டே மகன் அபு

ஆதாமின்டே மகன் அபு - சொற்களற்ற பதிலுக்கான வினாக்கள் 
This Article published in literary e-magazine "Uyirosai" (uyirmmai publications)24-10-2011 issue
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4923

writer Jayamohan posted his commnet about this article, in his blog...
http://www.jeyamohan.in/?p=22250

This article is mentioned in "VALAICHARAM"
http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_10.html

 

 

மலையாள மொழியில் திரையரங்கில்சென்று  படம் பார்த்து  எத்தனை ஆண்டுகள் ஆனது  என்று நினைவில்லை,  காரணம்   சமீபத்தில்  அப்படி எந்த மலையாள சினிமாவும் அவசியம்  பார்க்கும்படி  தூண்டவில்லை.
சில மாதங்களுகு முன் 2010 - ம் ஆண்டிற்கான 58 வது  தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது  சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் , சிறந்த பின்னணிஇசை,சிறந்த ஒளிப்பதிவு  பிரிவுகளில் விருதுகளை வென்ற "ஆதாமின்டே மகன் அபு"திரைப்படம்  பற்றி செய்திகள்  படித்தபோது அதனை பார்க்கவேண்டுமென ஆசைப்பட்டேன். இதே விருது பட்டியலில் வணிகரீதியில் வெற்றிபெற்ற ஆடுகளம், எந்திரன் படம் பற்றித்தான் மீடியாக்கள் புளங்கிதம் கொண்டிருந்தன. சிறந்த நடிகருக்கான விருதை தனுசுடன் பகிர்ந்துகொண்ட சலீம் குமார், சிறந்த பின்னணி இசைக்கான விருது வென்ற இசாக் தாமஸ்(சிறந்த பாடலாசிரியர்க்கான  விருதையும் வைரமுத்துவுடன்  பகிர்ந்துகொண்டார்) , சிறந்தஒளிப்பதிவிற்காக   மது அம்பட் பற்றி எந்த விவாதமும் மீடியாக்களில் அதிகம் இல்லை. (இதன் முக்கிய காரணம் இந்த திரைபடத்திற்கு   எந்த பொருளாதார பலம் கொண்ட குழுமங்களின் வணிகமும் ,விளம்பர பின்னணியும் இல்லையென்பதால் என நினைக்கிறேன்). சரி திரையரங்கில் சென்று பார்த்து விடலாம் என்றால் சென்னையில் எந்த திரையரங்கிலும் வெளியாகவில்லை. திருட்டு DVD யில் படம்பார்ப்பது பற்றி கடலளவு தீமை பற்றி பேசினாலும், ஒரு துளி நன்மை என்னவென்றால் வணிக ரீதியில் வெளியிடப்படாத அல்லது திரையரங்கிற்கு வர வாய்ப்பில்லாத தரமான திரைப்படங்களை, உலக சினிமாக்களை என்னைபோன்ற சராசரி திரைப்பட ரசிகனுக்கு பார்க்கும் வாய்ப்பு இதுபோன்ற வழியில்தான் கிடைக்கும்.


அத்தகைய வழியில் கிடைத்த DVD யில் படம் பார்க்க துவங்கியதும் சில நிமிடங்களில் அதன் தரமான ஒளிப்பதிவு முதலில்  நம்மை அந்த கதை களத்திற்கு அழைத்துச்சென்றுவிடுகிறது. அடுத்தது சலீம் குமாரின்  நடிப்பு , மலையாளத்தில் காமெடி/மிமிக்ரி நடிகரான  சலிம்குமாரின் உண்மையான  வயது 43 தான் ஆனால் 60 வயதை கடந்த முதியவர் பாத்திரத்தில்
இந்த படத்தில் அற்புதமான உடல் மொழியை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படத்தின் கதை, கேரளாவில் ஒரு சிறிய ஊரில் வாழும் ஏழை/முதிய இஸ்லாமிய தம்பதிகள் வாழ்வில் ஒருமுறையாவது புனித ஹஜ் கடமையை ( இஸ்லாத்தில் 5 முக்கிய கடமைகளில் இறுதியானது) நிறைவேற்ற பேராவல் கொண்டு, முயற்சித்து அதன் முடிவு என்னானது  என்பதுதான்.


      சில  மசூதிகளை கடந்து போகும்போது அதன் வாசல்களில்   சிறிய தரைவிரிப்பின்மேல் சிறு சிறு குப்பிகளில் அத்தர் வாசனை திரவியங்களையும், (இஸ்லாமியர்கள் அதிகமாக அத்தர் உபயோகிக்க காரணம் அதில் மற்ற வாசனை திரவியங்களில் இருப்பது போல்   ஆல்கஹால் இருக்காது, இஸ்லாத்தில்  ஆல்கஹால் தடை செய்யப்பட்ட பொருள்)  குரானின் வாசகங்கள் பொறித்த சிறிய சுவரொட்டிகளையும் பரப்பிவைத்து விற்பனை செய்பவர்களை  கவனித்திருக்கிறீர்களா? அதுபோன்ற சிறு ஏழை வியாபாரி "அபு " என்ற கதாபாத்திரம்தான் சலீம் குமார் நடித்திருப்பது, அவரின் உடல் மொழி மட்டுமல்ல அவரின் வசனமும் துல்லியமாக, நுட்பமாக இந்த படத்தில் உருவாகப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சிறிது சிறிதாக சேர்த்த பணத்தை ஒன்று சேர்த்து ஒரு நம்பிக்கையான Travel agency மூலம் ஹஜ்  பயணத்திற்கு
ஆயத்தமாகிறார், ஆனாலும் பண பற்றாக்குறைக்கு தனது மனைவியின் நகை, சிறிய வருவானதிற்கு ஆதாரமான  கால்நடைகள் அனைத்தையும் விற்று பணம் சேர்க்கிறார், இறுதியாக  50 ஆயிரம் ரூபாய்க்கு தனது விட்டிற்கு வெளியில் உள்ள ஒரு பெரிய மரத்தை ஒரு மர வியாபாரியிடம் (கலாபவன் மணி ) விலை பேசிவிடுகிறார்.  Travel agency -யில்  இறுதிதவணை  செலுத்த ஒருநாள் மீதமிருக்கும் தருணத்தில் மரவியாபாரியிடம் செல்கிறார், வியாபாரி தான் ஒப்புக்கொண்ட பணத்தை அவரிடம் கொடுத்து , தான் இன்று காலை அந்த மரத்தை வெட்டினேன் ஆனால் அது ஒரு உள்ளீடற்ற மரம் (Hollow wood ) ஆனால் இது வியாபாரம் அதனால் நான் ஒப்புக்கொண்ட பணத்தை தருவது தான் நியாயம்  என்கிறார். ஆனால் அபு, "இல்லை மரத்திற்கு தான் நான் இந்த பணத்தை வாங்க முடியும் விறகிற்கு அல்ல, அப்படி வாங்கினால் இந்த ஹஜ் நியாயமானது ஆகாது" என மறுத்துவிடுகிறார் . 50 ஆயிரத்தால் அபுவின் பயணம் தடைபடுகிறது என கேள்விப்பட்ட அவரின் ஆசிரிய நண்பர் (கொடுமுடி வேணு) அந்த பணத்தை இரவோடு இரவாக எடுத்து அபு வின் வீடு செல்கிறார் , ஆனால்  ஹஜ்ஜ் பயணம் எனபது உயிரோடு செய்யும் இறுதியாத்திரை போல , சுயசம்பாத்தியம் அல்லது தனது வாரிசுகள் செய்யும் ஏற்பட்டால் மட்டும் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியம் , கடன் வாங்கி அதை செய்வது தவறு என மறுத்து விடுகிறார். முன்றாவதாக அந்த Travel agency நிறுவனரிடம் சென்று தான் பயணத்தை ரத்து செய்ய கேட்கும்போது , அதன் நிறுவனர் "இந்த ஆண்டு 2500 பயணிகளை தங்கள் நிறுவனம் ஹஜ் யாத்திரைக்கு அனுப்புவதால் உங்களது பணம் எங்களை பாதிக்காது , அதுமட்டுமல்ல என் பெற்றோரும் நான் சிறுவனாக இருந்த போது இதுபோல் ஆசைப்பட்டவர்கள்தான் ஆனால் என்னால் நிறைவேற்ற முடியவில்லை, அதற்குபதில் உங்களை நான் அனுப்பிவைக்கிறேன்"  என்கிறார், ஆனால் அபு உன் பெற்றோரை நினைத்து எங்களை அனுப்புவது அவர்கள் சென்று வந்தது போல, எங்களுடையது ஆகாது இந்த பயணத்தின் வேட்கை எங்கள் ஆன்மாவினுடையது அது என்னால்தான் நிறைவேற்ற படவேண்டும் என அங்கிருந்து  வெளியேறிவிடுகிறார். மிக துயரமாக தம்பதிகள் நாட்களை கடக்கின்றனர், சில நாட்களில் பக்ரித் திருநாள் வந்துவிடுகிறது, அந்நாளில் அதிகாலையில் மசூதியில்  பாங்கு ஒலிக்கிறது,  எழுந்திருக்க மனமில்லாமல் படுத்திருக்கும் அபு திடீரென "ஒரு செயல் நமக்கு தடைபடுகிறது என்றால், ஏதோ  ஒரு தவறு செய்திருக்கிறோம், நம் பயண ஆசைக்காக ஒரு நல்ல மரத்தின் வாழ்வை வெட்டி அழித்திருக்கிறோம்". என்று சொல்லி உற்சாகமாக எழுந்து புதியதாக ஒரு மரக்கன்றை நட்டுவைத்து தொழுகைக்கு நடக்க துவங்குகிறார்.

 இந்தப்படத்தில்  அனைத்து   கதாபாத்திரங்களின்  இயல்பான   நடிப்பு,  பின்னணி இசை, ஒளிப்பதிவு பற்றி இங்கு சொல்வதை காட்டிலும் படம் பார்க்கும்போது நீங்கள் ரசிப்பதுதான் சிறப்பு. என் பார்வையில் இந்த கதை அபு கதாபாத்திரத்தின் மூலம் 3விசயங்களை நமக்குமுன்வைக்கிறது. முதலாவது மர வியாபாரியின் பணத்தை மறுப்பதால், மனசாட்சிக்கு
ஒவ்வாத , நேர்மையை சோதனை செய்யும் ஆதாயத்தை மறுப்பது , இரண்டாவது
நெடுமுடி வேணுவின் பணத்தை மறுப்பதால், தான் பின்பற்றும்/வழிநடக்கும்
வாழ்வியல் / மார்கத்திற்கு மாறானதை செய்யாதிருப்பது, முன்றாவது
Travels அதிபரின் சலுகைகளை மறுப்பதன்முலம் பிறர் ஆசையை, தான்
கடன்வாங்கதிருப்பது. இறுதியில் தன் ஆசைக்கு மரம் வெட்டப்பட்டதை உணர்ந்து
கண்முன் இருக்கும் இயற்கையை அழித்துவிட்டு கடமையென்ற பெயரில்
இறைவனுக்கு செய்வது ஒன்றுமில்லை என்பதை எந்த பிரசாரமும் , நீண்ட
வசனமுமின்றி காட்சியால்  உணரச்செய்திருப்பது அற்புதம்.  படம் முடிந்த பின்னர் பார்வையாளர்களை,   இந்த  சூழல் நமக்கு  நேர்ந்தால் எடுக்கும் முடிவு என்னவாக இருக்குமென வெளிப்படையாக யாரிடமும் பதில்  பகர முடியாத   அடிமன  கேள்விகளை  எழுப்புவது இந்த  படத்தை  ஒவொருவரும் பார்க்க வேண்டிய அவசியத்தை அதிகரிக்கிறது.   
 
யா. பிலால் ராஜா

Saturday, October 22, 2011

காலடிச்சில்லறை

காலடிச்சில்லறை






மோசசின் கடல்பிளந்த கைத்தடி

இயேசுவின் மீதறையப்பட்ட ஆணி

புத்தரின் பிச்சை பாத்திரம்

சாக்ரடிஸ் விஷமருந்திய கோப்பை

சீசரின் நெஞ்சறுத்த வாள்

கொலம்பஸின் திசைகாட்டி

அசோகர் நட்ட முதல் மரம் 

இவைகளை இன்றைய தினம்

தேடிக்கண்டறிவதை காட்டிலும்

கடினமெனத்தோன்றுகிறது

மாநகரப்பேருந்து  நெரிசலில்

காலடியில்  தவறவிட்ட

சில்லறையை கண்டுபிடிப்பது



யா. பிலால் ராஜா

இளமை

நேற்றிரவு கனவில் கடந்துபோன படகு
இன்றிரவு நிஜத்தில் திரும்புமென
ஒரு  காற்றற்ற கிரகத்தின்
கானல் நதிக்கரையில்  காத்திருக்கையில் 
வேரினில் படாத நீரைப்போல
இலக்கை இழந்து
என்னைக்கடந்து போய்க்கொண்டிருந்தது 
என் இளமை.

யா. பிலால் ராஜா



Tuesday, August 2, 2011

அமைதி எப்படி இருந்தது தெரியுமா...?

This Poem publised in literary e-magazine "Uyirosai" (uyirmmai publications)01-08-2011 issue http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4607



அமைதி எப்படி இருந்தது தெரியுமா...?



ஒரு நீண்ட பேருந்து பயணத்தில்
 உறக்கம் களைந்து என் அருகில் பார்த்தேன்
உறங்கிக்கொண்டிருந்தது ஒரு பெண் ஓவியம்
அந்த உறக்கத்தின்  அமைதி எப்படி இருந்தது தெரியுமா ?
மனிதர்களற்ற ஒரு பள்ளத்தாக்கைப்போல....
மழைக்கு பிந்திய கால்பந்து மைதானம் போல....
இரையுண்ட மலைபாம்பின் இடப்பெயர்வைப்போல....
மரணம் நிகழ்ந்த வீட்டின் மறுநாளைப்போல....
கலவரம் ஓய்ந்த கடைதெருவைப்போல....
மதம் தீர்ந்த ஒரு யானையின் நடையைப்போல....
விடுமுறை நாட்களில் அலுவலகம் போல.....
முதியோர் இல்லத்தின் ஒரு பகல் பொழுதைப்போல....
ஒரு பனித்துளி நீராவதைப்போல......
ஒரு நீர்த்துளி ஆவியாவதைப்போல....
பின்
ஓவியத்தின் உறக்கம் கலைத்து 
அதன்  பெயர் கேட்டேன்
உன் பெயர் சொன்னது
பின்  
உன் உறக்கம் கலைத்து 
உன்  பெயர் கேட்டேன்
ஓவியத்தின் பெயர் சொன்னாய்.

-யா. பிலால் ராஜா

Monday, July 18, 2011

துளை செல்லும் காற்று.....

This article publised in Leading tamil literary e-magazine "Uyirosai" (uyirmmai publications)18-07-2011 issue


(அறிமுகம் - குழலிசை கலைஞர் நவீன்குமார்)

சென்னையில்பெரும்பாலும் வார விடுமுறை  நாட்களில்   பொழுதுபோக்க   பிடித்த இடம் கடற்கரைதான் (அதிக செலவும் ஆகாது), அதிலும் எனக்கு  கடலை பார்ப்பதை காட்டிலும் அங்கு வரும் மனிதர்களும் சிறு வியாபார கும்பலும்தான் பார்பதற்கும் சுவராஸ்யமாக தோன்றும். சுண்டல், டீ, பலூன், மக்காசோளம்...., இந்த வியாபாரிகளை காட்டிலும் புல்லாங்குழல்
விற்பவர்கள்தான் எனக்கு வசீகரமாக தெரிவார்கள், காரணம் கடற்கரையில் எந்த பொருளையும் எந்த  கலைத்திறமையும் இல்லாமல் விற்று சம்பாதிக்கலாம், அனால் புல்லாங்குழல் விற்பவன் அதை வாசிக்க தெரிந்தால்தான் அந்த இடத்தை கவர முடியும். இதுவரை
 வாசிக்காதவர்கள் கூட 10 ரூபாய்க்கு வங்கி வாசிக்க ஆசைபடுவார்கள்.
          இந்த உலகில் மனிதன் கை சேர்ந்த  முதல் காற்றிசைக்கருவி
புல்லாங்குழலாகத்தானிருக்கும், கற்பனை செய்துபாருங்கள் வேட்டையாடுவதும்,  இனக்குழுக்களோடு இடம் பெயர்ந்தும் வாழ்ந்து கொண்டிருந்த கற்கால மனிதனுக்கு  காட்டில்   துளையுண்ட மூங்கிலுக்குள்  சென்ற காற்று எழுப்பிய ஓசை  கவர்ந்திருக்கும், மூங்கிலை  சரியான அளவில் துண்டித்து  தேவையான அளவில் துளைகளிட்டு இசைக்கத்துவங்கியிருப்பான்.  இன்று மனிதன் இசைக்கும் அனைத்து காற்றிசைக்கருவிகளின்  மூலம்  புல்லாங்குழலாகத்தானிருக்கும். இசைக்கருவிகளில் புல்லாங்குழலை மட்டும் மனிதன் சொந்தம்கொண்டாட முடியாது , அது இயற்கையின் உண்மையான இசைக்கருவி.மனித  உயிரோடு நெருக்கமானது குழலிசை,  நம் உயிர்தொடும்  சுவாசகாற்றை மறு நொடிக்குள் இசையாக  மாற்றிவிடுகின்றன   இசைக்குழல்கள்.நானும் பல இசைக்கருவிகளுடன் ஒப்பிட்டு பார்த்திருக்கிறேன்  மனிதக்குரலை  இடம்பெயர்த்து, குரலுக்கான இடத்தை நிரப்பும் இசைக்கருவி புல்லங்குழல்மட்டும்தான். எத்தனையோ நவீன இசைக்கருவிகள் வந்தாலும் இந்த நுற்றாண்டு வரை இசைகுழுக்களில் குழலிசையின் இடம் தவிர்க்கமுடியாதது.

            நானும் புல்லாங்குழலும்  முதலில் சந்தித்துக்கொண்டது என்னுடைய 8-ம் வகுப்பு பள்ளிநாட்களில்(90 களின் தொடக்கம் ) , என்னுடன் படித்த சரவணன் என்ற மாணவன்  சிறிய  புல்லாங்குழலை பள்ளிப்பையில் மறைத்துவைத்து பள்ளிக்கும், டியுசனுக்கும் எடுத்து வந்து   ஆசிரியர் இல்லாத நேரங்களில் வாசிப்பன்,வாசிப்பான் என்று சொன்னது விளையாட்டாக அல்ல  உண்மையாகவே அற்புதமாக  வாசிப்பான்,  அவன்  வாசிப்பதை  அதிசயமாகவும் , ஆர்வமாகவும் பார்துகொண்டிருபேன். நான் பார்ப்பதை பார்த்து குழலின் வாய் வைக்கும் துளைபகுதியில்  எச்சில் துடைத்து என்னிடம் தருவான், நானும் ஆர்வமாக முயற்சித்து பார்ப்பேன்  ஒரு சுரம் கூட  என்னால்  வாசிக்க முடியாது  (இன்று வரை முடியவில்லை எனபது வேறு விஷயம்). 
 இருகைகளிலும் லாவகமாக குழல்   பற்றி விரல்களை சுரங்களின் துளைகளில் வைத்து இதலை குவித்து துளையில் ஊதும் காற்று இசையாதல் எனபது ஆச்சரியமான  ஒன்று. "துளை செல்லும் காற்று மெலிசையாதல் அதிசயம்......" என்ற வைரமுத்துவின் வரிகள் வெறும் கவிதைப்பொய்யோ, மெட்டுக்கு வார்க்கப்பட்ட வார்த்தைகளோ அல்ல, உண்மையை பற்றிய உண்மை. சரவணன் ஒரு பிறவி கலைஞன் யாரிடமும் கற்றுக்கொளாமல் தானாகவே ஆர்வமுடன் கிபோர்ட், தபேலா வாசித்து பழகி கொண்டிருந்தான், என் ஆர்வத்தை பார்த்து அவன் வாசிக்கும் போது என்னையும் அருகில் வைத்துக்கொள்வான், புல்லாங்குழலில் 80 - களில் வெளிவந்த இளையராஜாவின் அதிஅற்புதமான மெலிசைகளை வாசிப்பான், உண்மையில் 80 - களுக்கு பின் வெளிவந்த சினிமா பாடல்களில்தான் இளையராஜாவால் குழலிசை அதிகமாக பயன்படுத்தப்பட்டது என நினைக்கிறேன், காதல், சோகம், கிராமிய பின்னணி கொண்ட பாடல்களில் மெலிசை சந்தங்களை குழலிசை கொண்டு மயக்கியிருப்பார். என் நண்பன் எப்போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட புல்லாங்குழல்களை வைத்திருப்பான் அளவில் வித்தியாசம் கொண்ட அவைகள் 7 முதல் 9 துளைகள் கொண்டதாக இருக்கும், எல்லா இன முங்கிளிலும் குழல் செய்ய முடியாது,(சில வகை மூங்கில்கள் நடுவில் துளைகள் இல்லாமல் இருக்கும்) தகுந்த அளவிலான உள்ளீடற்ற முங்கிலை தேடி சூடான இரும்பு கம்பி கொண்டு அவனே துளையிட்டுக்கொள்வான், இவ்வாறு இனிமையாக சினிமாப்பாடல்களிலும், நண்பன் மூலமாகவும் குழலிசை கேட்டுகொண்டிருந்த சமயத்தில் (1992 - ல்) புதுமையான குழலிசையை செவி  சந்தித்தது, ரகுமான் இசையில் ரோஜா படப்பாடல்களை எங்கள் வியாபார கடை அருகிலுள்ள திருமண மண்டபத்தில் ஒளிபரபிக்கொண்டிருந்தனர், அதில்  "சின்ன சின்ன ஆசை.." பாடலை துவக்கி வைக்கும் குழலிசை,அதுவரை  நான் கேட்டஅனைத்து சினிமாப்பாடல்களின் குழலிசையிலிருந்து புதிதாய் இருந்தது, மீண்டும் கேட்கும்போது முதல் 25 நொடிகளை கவனித்துப்பாருங்கள்.  அந்த  குழலிசையின் நுட்பமும் புதுமையும்,  கூர்ந்த ஒலிபதிவு தரமும் குழலிசை மீதான என் ரசனையை முழுவதும் மாற்றிப்போட்டது. அதன் பின் ரகுமானின் புதிய முகம் , ஜென்டில்மேன் , திருடா திருடா, ஜீன்ஸ், கிழக்கு சீமையிலே, மே மாதம், பம்பாய், காதல் தேசம், இந்தியன், முதல்வன், Rangela, Taal ........... என அனைத்து  படங்களின் புதுமையான இசைஅமைப்பு,பாடல்களில் குழலிசை பயன்படுத்திய விதம், அவரின் பாடல்களை  தொடர்ந்து கேட்கும் ஆர்வத்தை  உப்பு  நீரில் தீர்க்க  முடியாத  தாகத்தைப்போல்நாளுக்குநாள் அதிகரித்தது. ரஹுமானால் உருவாக்கப்பட்ட புதிய தலைமுறைக்கான முதல் இசையை, உலகின் முதல் இசை கருவியான புல்லாங்குழல் மூலம் கண்ணில் காண முடியாத மந்திர  அதிவலைகளாக  காற்றில் துவக்கி வைத்தது நவீன்குமாரின்  புல்லாங்குழல். இந்த கட்டுரைக்கு காரணமான புல்லாங்குழலிசை  ரகுமானின்  ஒவ்வொரு இசை தொகுப்பிலும், பாடல்களிலும் காற்றின் புதிய அடுக்கில் பயணித்தது, அதுவரை புல்லாங்குழல் மெல்லிய(காதல்/சோகம்) ராகங்களை மட்டும்  பாடும், என்ற  இசைபிம்பம்  காற்றில் கரைந்து, ரகுமானின் "மாத்தியோசி" formul composing -ல்  தாளங்களையும் இசைக்கும் கருவியாகவும் குழலிசை மாறிப்போனது. மெல்லிய காதல்,காமம், சோகம், துள்ளலிசை, வன்மம், என எல்லா உணர்வுகளும்  குழலிசையாக  அதிரடித்தது. பின்னாளில் ரகுமானின் இசை நிகழ்சிகள், பத்திரிகை செய்திகள் வாயிலாக அவரின் அனைத்து  படங்களுக்கும் புல்லாங்குழல் இசை கொடுத்தது  "நவீன் குமார் " என்ற இசை கலைஞர் என்று தெரிந்து கொண்டேன்.

கடந்த 20 ஆண்டுகளாக ரகுமானின் இசையை பின்தொடர்ந்த்தில் ஆச்சரியமான ஒன்று இந்த நவீன்குமார் என்ற புல்லாங்குழலிசைகலைஞர், காரணம் ரகுமானிடம் தொடர்ந்து பணிபுரியும் இசைக்கலைஞர்கள் மிக அபூர்வம், காரணம் ஒவ்வொரு இசை கலைஞர்கள், பாடகர்கள் , தொழில்நுட்பகலைஞர்களின்  திறமையை  கணித்து  ஒவொரு  படத்திலும்  அவர்களின்  சிறந்த பங்களிப்பை பெற்றுவிடுவார், பின் அடுத்த இசை தொகுப்பிற்கு புதிய திறமைகளை தேட துவங்கிவிடுவார், அதிஅபாரமான  கலைஞர்கள் மட்டும் தான் அவருடன் இன்று வரை பயணப்படுகின்ற்னர், அவர்களில் மறைந்த H. ஸ்ரீதர்(sound /dts  mix), சிவமணி (Drums), ரஞ்சித் பரோட் (organaisar), ஸ்ரீநிவாஸ் (singer / track singer), ஹரிஹரன் (singer) வரிசையில் நவீன்குமரும் ஒருவர்.  காரணம், ரோஜாவில் தொடங்கி இன்றுவரை  புதிது புதிதாக பரிசோதனைகள், இசை சந்தங்கள், ஓசைகளை உருவாக்குவதில் ரகுமானுடன் ஒரே அலைவரிசையில் பயணிப்பவர் நவீன்குமார், 1984 முதல் தொழில் முறை இசைகலைஞரான நவீன்குமார் புல்லாங்குழலின் இசையிலும் அதன் வடிவத்திலும் பல மாறுதல்களை கொண்டுவந்தார். ரகுமானிடம் மட்டுமல்லாது இந்தியாவின் பல முன்னணி இசை அமைப்பாளர்களிடமும் பணிபுரிந்துள்ளார். பம்பாய் படத்தின் Theam Music தான் அவரை அனைத்து இசை மேடைகளிலும் இந்திய அளவில் அடையாளம் காண/கேட்க வைத்தது. அவரின் குழலிசை பற்றிய வார்த்தை அறிமுகத்தை காட்டிலும் பின்வரும் வலை பக்கத்தை சொடுக்கி அதில் ஒலிக்கும் அவரின் குழலிசையை  ஒரு10 நிமிடம் அவசியம் கேட்டுபாருங்கள் http://www.flutenaveen.com/ .
புல்லாங்குழல் மட்டுமல்ல "பாசூரி" (புல்லாங்குழல் இனம்தான் ஆனால் இதழ்  ஊதும் துளை  பக்கவாட்டில்  இல்லாமல் முனையில்  இருக்கும்)போன்ற குழலிசை கருவிகளையும்மேடை நிகழ்சிகளில் வாசித்து  அதிரடித்தார். வட இந்தியாவில்  கூட  சினிமா  தவிர்த்த பல அபாரமான,  "ஹரி  பிரசாத் சொவ்ரஷ்ய" போன்ற புலங்குழல் இசை கலைஞர்களும் அவர்களின் இசை தொகுப்பும் ரசிக்க கிடைக்கும் (ரகுமானின் ஜன கன மண ... அல்பத்தில்  முதல் வரியை குழலிசை மூலம் துவக்கிவைப்பவர்)


தமிழ்நாட்டில் இதுபோன்ற இசை தொகுப்பிற்கும், ரசனைக்கும் இன்றுவரை வாய்ப்பில்லை, அனால் நவீன்குமார் மூலம் தரமான, புதுமையான குழலிசை தேவைகள்  ஓரளவு  தீர்க்கப்படுகின்றன. ரகுமான்- நவீன்குமார் கூட்டணி புல்லாங்குழல் வடிவத்தை கூட மாற்றி (அவரின் மேடை நிகழ்ச்சிகளில் புதிய வடிவ கருவிகளை கையாள்வதை காணலாம் ) ஓசை பரிசோதனை செய்தனர். Haris ஜெயராஜ் -ன்  முதல் படமான "மின்னலே" -வின் 'வசீகர ....'  பாடலில்  புல்லாங்குழல் வசீகரமும்  நவீனின் குழல்தான். சினிமா இசை தவிர நவீன்குமாரின்  "Cafe fluid " என்ற ஆல்பமும்  sony  நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
Drums சிவமணியின் "மகாலீலா" என்ற இசை அல்பத்தின் குழலிசை பகுதியை  நிரப்பியது  நவீனின் இசை. உலகின் அனைத்து வகையான குழலிசை கருவிகளின்  சேகரிப்பும் நவீன்குமரிடம் உண்டு.(நவீன்குமார் பற்றிய NDTV-யின் சிறுதொகுப்பு link).
நவீனின் குழலிசை ஆளுமையை முழுவதும் உள்வாங்கிக்கொள்ள வேண்டுமென்றால்  
கடந்த  20ஆண்டு ரஹ்மான்  பாடல்களின்  மீள் கேட்பின்போது குழலிசை  பகுதியை மட்டும் தனியே ரசித்து பாருங்கள் என்னை போல  உங்களுக்குள்ளும்  ஊடுருவியிருக்கும் நவீ(ன)னின் குழலிசை.


யா. பிலால் ராஜா

Tuesday, April 19, 2011

செயற்கைத்தேன்


This article publised in Leading tamil literary e-magazine "Uyirosai" (uyirmmai publications))
25-04-2011
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=4252

   இந்த பதிவு நிச்சயம் சர்பத் என்ற குளிர்பானத்தின் தயாரிப்பு முறை பற்றியதல்ல வந்தேறி குளிர்பானமான் coke, pepsi  குழுமத்தால் வாழ்விழந்த ஒரு சிறுதொழிலும்,  நம் சமூகத்தின்  எளிய  மக்களின்  குளிர்பான குறியீடுகளில் ஒன்றான சர்பத்திற்கும் எனக்குமிடைபட்ட  ஒரு உறவைப்பற்றியது.  சமீபத்தில்  எனது  சொந்த ஊர் சென்றநான்  எங்களது  குளிர்பானக்கடையில் அமர்ந்து எனது  தந்தையுடன்  பேசிக்கொண்டிருந்தேன் அப்போது காலடியில் இரண்டு சர்பத் பாட்டில்கள் பரிதாபமாக என்னை  பார்ப்பதுபோலிருந்தது, எங்களது பேச்சின் இடைவெளிகளையெல்லாம் சர்பத்துடனான என் நினைவுகள் வந்து
நிரப்பிக்கொண்டிருந்தது.

     சர்பத்தை நான் குளிர்பான கலாச்சார குறியீடு என்று சொல்வது இந்த கட்டுரையின் கருப்பொருள் என்பதால் அல்ல,  நன்னாரி  என்ற தாவரம் நம் நாட்டின் இயற்கை  மூலிகைகளில் ஒன்று,  அதன் வேருக்கு உடலை குளிர்ச்சியாகும்ஆற்றல் உள்ளதென்று சித்த, ஆயுள்வேத மருத்துவங்களில் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் (அயுள்வேததில் நன்னாரி " சாரிப"  என்றழைக்கப்படும், அதிலிருந்து  உருவானதுதான் "சர்பத்"  என்ற வார்த்தை )

சலதொடம் பித்தமதி தாகம் உழலை
சலேமேறு சீதமின்னார் தஞ்ச்சூடு லகமதிற்
சொன்னமது மேகம் புண் சுரமிவை யெ லா மொழிக்கும்
மென்மதுர நன்னாரி வேர் (அகத்தியர் குணபாடம்)

(பதறவேண்டாம்  பள்ளி பருவத்திலிருந்து " கட்டுரை எழுதினா 'எடுத்துகாட்டு' இருந்தாத்தான் நெறைய மார்க் கெடைக்கும்....." ன்னு  வாத்தியார் சொன்னது மனசுல பதிஞ்சதால மேற்கண்ட பத்திய தவிர்கமுடியல ) நன்னாரியின்  வேரை நீரில்  ஊறவைத்து  வடிகட்டி குடிப்பது உடல் உஷ்ணம் தணிக்க நம்முன்னோர் கையாண்டமுறை, ஆனால் வேர் ஊறிய நீரை குடிப்பது சுவைக்கது
என்பதால் சர்க்கரைபாகுடன் கலந்து குடித்தனர் , அதுதான் "நன்னாரி சர்பத்" ஆனால் காலப்போக்கில்  நன்னாரி வேருக்கு  பதில்  " எஸ்சென்ஸ்" பயன்படுத்த  துவங்கியதால் நன்னாரி வேரின் பயன் மறைக்கப்பட்டு இனிப்பு குளிர்பானமாக மாறியது, இன்றைய தினம் சர்பத் தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளிடம் யாரிடமாவது நன்னாரி வேரை பார்த்திருக்கிறிர்களா? என்று கேட்டு பாருங்கள், நமது உணவு பழக்கத்தில் chemistry எந்தாளவுக்கு
workout ஆகியிருக்கிறதென்று தெரியும்.  சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் பள்ளிப்படிப்பும், கடை  வியாபரமும்   இருசக்கரவாகனத்தின்  இரு  சக்கரங்களைப்போல் எனக்கு  தவிர்கமுடியாததாய்  இருந்தது,  (அப்போது coke pepsi இந்தியாவில்  உற்றேடுகாத காலம். 1993 -க்கு பின் தான் coke ,pepsi இந்தியாவில் புது பொலிவுடன் நுழைந்தது) , எல்லா குளிர்பான கடைகளில்
இருப்பது போலவும்  20-க்கும் குறைவில்லாத சர்பத் பாட்டில்கள் எங்கள் சர்பத்  ஸ்டாலின் முன்வரிசையில்  படைவீரர்களைபோல்  கம்பிரமாக அணிவகுத்திருக்கும்,   ஸ்டாலின் பக்கவாட்டு கிராடில் அடுகப்பட்டிருக்கும் Torino , Bavanto , praja போன்ற உள்ளூர் குளிர்பனங்கள்தான் அன்றைய பணக்கார பானங்கள், நடுத்தர ஏழைமக்களின் தேர்வு பெரும்பாலும்  சர்பத்தகத்தானிருகும். அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு 8 -10 பாட்டில்கள் விற்கும் கோடையில் 20 -ஐ தொட்டுவிடும்,ஒரு   பாட்டிலுக்கு 14 - 16 கிளாஸ் சர்பத் எடுக்கலாம், அனால் என்  வியாபாரதிறமையால்  (திருட்டுத்தனத்தை  இப்படியும் சொல்லலாம்)  20 ஐ தொட்டுவிடுவேன்.

      தரமான சுவையான சர்பத் தயாரிப்பது கூட ஒருகலைதான், எனக்கு 14 வயதிலேயே அக்கலை என் கைவந்துவிட்டது, 10 அவுன்ஸ் க்ளாசில் 4 -ல் ஒருபாகம் நன்னாரி சர்பத் இட்டு , ஒரு முழு எலுமிச்சை சாறுவிட்டு , உள்ளங்கையில் அடங்கும் பனிக்கட்டி துண்டு ஒன்றை முழுதாகவும் இல்லாமல், பொடி துகள்களாகவும் ஆக்காமல் அரைகுறையாக உடைத்து அதிலிட்டு பின் மீதி இடத்தை நீரினால் நிரப்பி   இருமுறை ஆற்றி.....மன்னிக்கவும், சுவையை எழுத்தில் எழுதி படிப்பவருக்கு உணரவைக்க எந்த மொழியிலும் வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன், வாய்பிருந்தால் நான் சொன்னபடி ஒரு சர்பத்  குடித்துவிட்டு  வந்து மீண்டும் தொடருங்கள். அதிலும்  நீருக்கு  பதில்  இளநிர், நுங்கு, சோடா  வஸ்துகளை  சேர்த்து அருந்திப்பாருங்கள் நிச்சயம் சுவை பித்தேறியிருப்பீர்கள்

      எங்களது வியாபாரகடையை விடுத்தது வெளியோ நான் செய்த முதல் வியாபாரமும் சர்பத்தைகொண்டுதான், 7 -ம் வகுப்புமுதல்  மேல்நிலை   இருதிஆண்டுவரை  ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதிநாட்களிலும் (Farwell)  Tea party நடக்கும், அன்று பெரிய பாத்திரத்தில் சர்பத் கலந்து வைத்து அனைத்து மாணவர்களுக்கும் ஒரு கிளாஸ் குடிக்க தருவார்கள், (ஆனால் class leader  மட்டும்2 கிளாஸ் குடிப்பதை பார்த்தல் எரிச்சலாக வரும்) அப்படி சர்பத் தயாரிக்க மூலப்பொருட்களை supply செய்வதுடன் production manager - ஆகாவும் செயல்படுவேன், (முதல் இரண்டு ஆண்டுகள்தான் supply
செய்யும் சர்பத் பொருட்களுக்கு சரியான பணம் வாங்கினேன், அடுத்தடுத்த வகுப்பு ஆண்டுகளில் கமிசன் அடிக்க துவங்கினேன்) 

      புத்தருக்கு போதிமரம் போல் எனக்கு எனது வியாபாரகடைதான்  என்னை  சுற்றிய என் உலகம் பார்க்க உதவியது,  குடிகாரர்களின் ரோட்டோர  சண்டை,  கோஷ்டி   மோதல், கட்டைபஞ்சாயத்து  கலவரம்  இவைகளை  நீங்கள்  தினசரிகளில்தான் படித்திருப்பீர்கள், சாறு பிழியும் கட்டைகளுகிடைய சிக்கிய எலுமிச்சை போல்  எங்களின் நாட்கள்   இந்த கலவரங்களுகிடையேதான்  தினமும் நசுங்கிக்கொண்டிருக்கும், சினிமாவில் பார்ப்பது போல நிஜக்கலவரத்தில் அரிவாள், கத்தி, வாள் போன்றவற்றை எளிதில் பார்க்க முடியாது, கலவரக்காரர்களின் கையில் முதலில் சிக்குவது சாலையோர கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சர்பத், சோடா பாட்டில்கள்தான், கைக்கு சிக்குவதை எடுத்து உடைத்தும், எதிரிகளின் மேல் எரிந்தும் (பெரும்பாலும் ரோட்டில்தான் விழுந்து உடையும்) தாங்கள் "சண்டியர்" என்பதை காட்டிக்கொள்வார்கள்.அந்த சமயத்தில் எங்களை போன்ற வியாபாரிகள் மீதமிருக்கும் பாட்டில்களைத்தான் காப்பாற்ற முடியுமே தவிர அவர்கள் எதிர்க்க முடியாது,  கலவரம்  ஓய்ந்த பின் கடை முன் உடைந்துகிடக்கும் பாட்டில்சில்லுகளை சுத்தம் செய்யும்போது கலவரத்தை வேடிக்கை பார்த்தவர்கள்
என்னை பரிதாபமாக பார்க்கும்போது மனம் உணரும்  அவமானம்  சட்டை மீது பட்ட வாழைக்கறைபோல்  இன்றும் கூட மனதிலிருந்து மறையவில்லை. காலையில் ஆர்வத்துடனும், ஆசையாகவும் துடைத்து எடுத்துவைத்த சர்பத் பாட்டில்கள் மாலையில் உடைந்து சிதறிகிடபதை பார்த்தாலும், மறுநாள்
அதே ஆர்வத்துடன்   வியாபாரம் ஆரம்பிப்போம்.

      எங்கள் பகுதியில்  நடக்கும்  அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு சர்பத் மற்றும் குளிர்பான விநியோகம் நாங்கள்தான். ஆனாலும் அன்றைய
தினத்தின் முடிவு பாலா இயக்கும் படங்களின் முடிவைப்போல சோகமாகத்தானிருக்கும், காரணம்  3-ல்  ஒரு பங்கு பணம்தான் எங்களுக்கு வந்து சேரும்.  அதிலும்  ரவுடிகள்  குடிக்கும்  சர்பதிற்கு கூட பணம்  வாங்கிவிடலாம் ஆனால் போலீசிடம் வாங்கமுடியாது. ( இப்படியெல்லாம்   அன்று இழந்த பணத்தை இன்று வசூல் செய்தால் கூட  இணையத்தில் இப்படி ஓசியில் எழுதாமல் Discovery -channel தரத்தில் ஒரு ஆவணப்படம் (documentry )எடுக்கலாம் என மனம் வி(கு)ரும்புகிறது )

     ஒரு பொருள் மக்களிடம் செல்வாக்கு இழப்பதற்கு  காரணம்  போட்டி தயாரிப்புகள் மட்டுமல்ல அது நுகர்வோருக்கு தரம் மற்றும் சேவையில்
அதிருப்தி கொடுப்பது கூட காரணம்தான்,  பொதுவாக  எல்லா  கடைகாரர்களைபோல எனக்கும்  சர்பத் தயாரிக்கும்  குடிநிரின் சுகாதாரம் பற்றி  அதிக அக்கறைகிடையாது, சிலசமயம் முந்தைய சர்பத் தயாரிக்க
பிழிந்த எலுமிச்சையின் தோலை மீண்டும் நீரில் ஊறவைத்து வாடிக்கையாளர் பார்க்காத நேரத்தில் மீண்டும் அடுத்த சர்பதிற்கு பிழிந்துவிடுவேன், எச்சில் கிளாஸ் சுத்தம் பற்றி எழுதவே வெட்கமாக இருக்கிறது. (அப்போது நான்செய்த முற்பகல் வினைதான்  சென்னை  கடைகளில் சர்பத் அருந்தும்போது  பிற்பகல் வினையாக அனுபவித்தேன்.)
இந்த சமயத்தில்தான் coke , pepsi இனங்கள் ஊருக்குள் வந்திறங்கியது, அதுவரை இந்தியவின் Branded குளிர்பனக்கலான Sakthi Groups-ன் 'Gold spot ','Limka ', 'Thums up ' ஆகியவற்றை coca cola குழுமம் வாங்கி(விழுங்கி ) தங்களது தயாரிப்புகளை பரப்பிக்கொண்டிருந்தனர், எல்லா வியாபரிகளைப்போல் நானும் coke,pepsi  தயாரிப்புகளை கடையில் நிரப்பதுவங்கினேன், உண்மையில் மக்களும் சுகாதாரமற்ற உள்ளூர் குளிர்பான தயாரிப்புகளைவிட
 coke , pepsi களின் தயாரிப்புகளில்தான் முகத்தை கழுவிக்கொண்டிருகின்றனர்.   இன்று   ஓரம்கட்டப்பட்ட  சர்பத், சோடாக்களின்  நிலையை  பார்க்கும்போது   பிரிதிஷ்காரர்களிடம் வாழ்விழந்த பாளையக்காரர்கள், குறுநிலமன்னர்களின்  கதைதான் நினைவுக்கு வருகிறது .

யா. பிலால் ராஜா



    







   



Friday, February 25, 2011

திசைவேகம் சுழியாகிறது


மணி இப்பொழுது  00 : 00 :௦௦ 00 (hh:mm:ss)

நெடுஞ்சாலை வாகன சக்கரத்தில் ஒரு தவளை நசுங்கிக்கொண்டிருகிறது

முதல் நீர் துளியை பிரசவிக்கிறது ஒரு மேகக்கூட்டம்

உருப்பெருக்கம் அடைந்து கொண்டிருக்கிறது ஒரு எறும்பின் ஆணுறுப்பு

தாடையிலிருந்து தரைக்கு பயனப்பட்டுக்கொண்டிருகிறது பாலைவனபயணியின் ஒருவியர்வை துளி

கண்ணிவெடியை மிதித்ததறியா ஒருவன் அதிலிருந்து காலை எடுத்துக்கொண்டிருகிறான்

தான் கடித்த கைக்கு முதல் துளி விஷத்தை அனுப்பிக்கொண்டிருகிறது பாம்பொன்று

பாலுடன் தன் நிறத்தை பகிர்ந்துகொண்டிருகிறது  தேயிலைத்துகலோன்று

ஒரு எந்திரத்தின் இறுதி துளி எரிபொருள் தீர்ந்து கொண்டிருக்கிறது

ஒரு அங்குலம்தான் - இறங்கிக்கொண்டிருக்கும் இடியோன்றிற்கும் கோபுர உச்சிக்குமிடைதூரம்   

பிடிபட்ட போராளியின் பின்னந்தலைக்குள் பாய்ந்து கொண்டிருந்த  குண்டின் திசைவேகம் சுழியாகிறது

"******** துணை" என்றெழுதப்பட்ட இருவாகனங்கள் நேரெதிராக  மோதத்துவங்கியிருந்தான

இப்பக்கத்திற்கான இறுதி வரியை யோசித்துக்கொண்டிருக்கிறேன் நான்

மணி இப்பொழுது  00 : 00 :௦௦ 01  (hh:mm:ss)

Friday, January 28, 2011

மதுரை ஸ்ரீ ஒரிஜினல் முனியாண்டி விலாஸ்

திருமணத்திற்குப்பின்  ஹோட்டல்களில் உணவு உண்பதை சுத்தமாக நிறுத்திவிட்டேன்.  வீட்டை விட்டு வெளிவந்து 7 ஆண்டுகளாக ஹோட்டல், சாலைஒரக்கடை, டிபன் செனட்டர், மெஸ் என்று அனைத்து வகை உணவகங்களிலும்  உண்டு களித்திருக்கிறேன். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும், பசி போயிருக்கிறதோ இல்லையோ, கோபம் வந்திருக்கும்.   சில கடைகளில் unlimite meals என்று போட்டிருக்கும் , ஆனால் இரண்டு   முறைக்குமேல் சாதம் வைக்கமாட்டார்கள், காலையில் டீ மட்டும் குடித்து மதியம்   இந்த   unlimite meals - ல் அன்றைய பட்ஜெட்-ஐ சரிகட்டலாம் என்ற திட்டத்தில்  இடி(யாப்பம்)  இறங்கி இருக்கும் . சில கடைகளில் கைலி கட்டிய  சர்வர்கள் வலது கையால் அவனது ********  சொறிந்துகொண்டே  " சார் சூடா என்ன சாப்பிடுரிங்க" என்பார்கள்  நக்கலாக, சில கடைகளில் ரசத்தை தவிர வேறு எதை மறுமுறை  கேட்டாலும் முறைப்பார்கள்.
(இப்படி எண்ணற்ற உணவகதுயர்களை  நான் சந்தித்தாலும்    இப்பதிவு அதை பற்றியல்ல )    இதுபோன்ற சம்பவங்களால் உணவகங்களுக்கு செல்லாமலிருந்த நான், சென்ற வாரம் என் வீட்டின் அருகிலிருந்த ஒரு கடையில் இரவு சாப்பிட நேரிட்டது,  அங்கு  "மதுரை ஸ்ரீ ஒரிஜினல் முனியாண்டி விலாஸ்" என்ற பெயர் பலகை, பயணசீட்டு இல்லாமல் என் நினைவை என் ஊரை நோக்கி பயணப்படவைத்தது.

                தமிழகத்தில் எல்லா  ஊர்களிலும்,ஒரு பேருந்துநிலையம் இருந்தால் அதை சுற்றிய பகுதியில் ஒரு முனியாண்டி விலாஸ் இருப்பதாய் நிச்சயம் நம்பலாம், அந்த அளவு தமிழகத்தில் அசைவ உணவகங்களின் பட்டியலில் முனியாண்டி விலாஸ்-க்கு முக்கிய இடமுண்டு.  எனது ஊரிலும் (போடிநாயக்கனூர் )   "மதுரை ஸ்ரீ ஒரிஜினல் முனியாண்டி விலாஸ்" என் பெரியாப்பாவால் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
எங்கள் குடும்பம் பற்றியும் அந்த கடை பற்றியும் யாரிடமாவது அறிமுகம்  செய்யும்போது, ஒருமுறைக்கு இருமுறை ஆச்சரியத்துடன் கேட்டு   உறுதிப்படுத்திக்கொள்வார்கள், ஒரு இஸ்லாமியக் குடும்பத்தினர் எப்படி  முனியாண்டி விலாஸ் என்று பெயரிட்ட கடை நடத்துகிறார்கள்? என்று. இந்தியவிலே இஸ்லாமியரால் நடத்தப்படும் முனியாண்டி விலாஸ் இது ஒன்றாகத்தான் இருக்கும் 35 ஆண்டுகளுக்கு முன் போடிநாயக்கனுரில் ஒரு நாயக்கரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கடை அவரால் நடத்தமுடியாததால் எனது பெரியாப்பாவாலும் இன்னொரு உறவினராலும் எடுத்து நடத்தப்பட்டது,  பெயர் மாற்றாமல் எனது பெரியாப்பாவால் இன்றும் நடத்தப்படுகிறது. இன்று தமிழகத்தில் நாம் காணும் அனைத்து உணவாக குழுமங்களின் (காரைக்குடி, செட்டிநாடு, அஞ்சப்பர், .......)  வெற்றிகரமான முன்னோடி "மதுரை ஸ்ரீ ஒரிஜினல் முனியாண்டி விலாஸ்"   ஹோட்டல்கள்தான்.  முனியாண்டி விலாஸ் உணவகங்களின் களமூலம் மதுரை மாவட்டம், திருமங்கலம் என்ற ஊரிலிருந்து  14  கி.மீட்டர் தொலைவில் உள்ள   வடக்கம்பட்டி என்ற கிராமத்திலிருந்து  உருவானது.  நாயுடு மற்றும் ரெட்டியார் சமுகம் அதிகம் வாழும் இப்பகுதியில் சுமார்75 ஆண்டுகளுக்கு முன் பருவமழை தவறியதால் கடும் பஞ்சம் நிலவியது. தொழில் வியாபாரத்திலும் அப்பகுதி மக்கள்  தோற்றுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வூரில் கோவில்கொண்டிருந்த, காவல்   தெய்வமாக கருதப்பட்ட  முனியாண்டி சுவாமி, சுப்பா நாயுடு என்பவரின் கனவில் தோன்றி ஏழைகளுக்கு பயனாகும் வகையில் உணவகம் நடத்துமாறு கூறினாராம்,
அதனால் 1934 -ல் "ஸ்ரீ முனியாண்டி விலாஸ்" என்ற பெயரில் முதல் கடை ஆரம்பிக்கப்பட்டது, அதன் பின் அவ்வூர் மக்கள் தமிழகத்தில் பல  ஊர்களில்  அதே பெயரில் உணவகங்களை தொடங்கினர்,தொடங்கும் முன் வடக்கம்பட்டி    முனியாண்டி சுவாமி கோவில் சங்கத்தில் பெயர்  பதிவு செய்துவிட்டு,  பூஜைகளிட்டு   முனியாண்டி சுவாமி அனுமதி கேட்டபின்தான் இன்றும்  கடைஆரம்பிகின்ற்னர். ஒவ்வொரு  ஆண்டும் ஜனவரி 3-ம்  வாரம்  சங்கத்தின்  உறுப்பினர்களிடம் நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருடாந்திர திருவிழா நடைபெறும் அப்போது அனைத்து   முனியாண்டி  விலாஸ் உணவகங்களில் இருந்தும் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள், பின்னாளில் நாயுடு மற்றும் ரெட்டியார் சமுகங்களுக்கிடையேயான  வழிபாட்டுமுறை கருத்து வேறுபாட்டால் அச்சம்பட்டி, புதுப்பட்டி என்ற இரு இடங்களில் முனியாண்டி சுவாமி   கோவில்  மற்றும்  சங்கம்  எற்படுத்தப்பட்டது, தற்போது நாம் காணும் அனைத்து
"மதுரை ஸ்ரீ ஒரிஜினல் முனியாண்டி விலாஸ்" உணவகங்களும் இந்த 3 கோவில்  சங்கத்தில் பதிவு செய்யப்பட்டவையாகத்தானிருக்கும். தமிழக அசைவஉணவகங்களின் உண்பண்டப்பட்டியலை (Menu) வாடிக்கையாளர்களுக்கு நிறைவாக  முதலில் வடிவமைத்தது  முனியாண்டிவிலாஸ் உணவகங்கள்தான்.
அளவு சாப்பாட்டுடன் பொரியல்,அவியல், சாம்பார், வற்றல்குழம்பு, ரசம், மோர்   இணைந்திருக்கும், பிரியாணி, குஸ்கா, குடல்குழம்பு, அயிரைமீன் குழம்பு, மூளை வறுவல், மட்டன்சுக்கா, கோழி குழம்பு போன்ற விதவிதமான  அசைவத்தை  அனைத்துதரப்பு மக்களையும் அரை நூற்றாண்டு காலமாக  அசைபோட வைத்தது இந்த உணவக குழுமம். ஆனால் சமீப காலங்களில் வெவ்வேறு உணவக குழுமங்கள் தரத்திலும், சேவையிலும் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டன, மேலும் கடந்த 10 ஆண்டுகளாக வேகமாக பரவிய Fastfood கலாச்சாரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்த 75 ஆண்டுகால தமிழக அசைவ உணவக கலாச்சாரம் பின் தங்கிவிட்டது. ஆனாலும்  இன்றும்கூட சாமானியர்கள் இரட்டைஇலக்க பணத்தில் சாப்பிட தைரியமாக    நுழையும் கடையாகத்தானிருக்கிறது  "மதுரை ஸ்ரீ ஒரிஜினல் முனியாண்டி விலாஸ்" உணவகங்கள்.