Wednesday, November 10, 2010

KAILASH KHER


பசி, காதல்காமம்  போல இசையும் உணரத்தான்முடியும், ஒருவர் மற்றவர்க்கு உணர்த்த முடியாது என நினைகிறேன். ஆனால் அறிமுகம் செய்ய   முடியும். நான் உணர்ந்த ஓர் இசை ஆளுமை பற்றிய அறிமுகம் இந்த கட்டுரை.

சினிமாசார்ந்த ஒரு இசைதொகுப்பு வெளிவந்தால் அது A R ரகுமான் இசை தொகுப்பு என்றால் உடனே எப்படியாவது வாங்கி கேட்டுவிடுவது வழக்கம்,
ஒவ்வொருதொகுப்பிலும்புதிய பாடகர்கள்திறமையான இசைக்கருவி இசைபவர்கள், புதுமையான தாளஒலிபதிவு   அறிமுகம் நிச்சயம் இருக்கும். என் பள்ளி பருவத்திலிருந்து அவர் இசையின் மொழிஎனக்கு பரிட்சயம் என்பதால் கடந்த 15 + ஆண்டுகளில்  என் கொண்டாட்ட தருணங்களில் அவரின் இசைக்கு முக்கிய பங்கு உண்டு.
பெங்களூரில் தங்கி வேலை பார்த்துகொண்டிருந்த காலத்தில் சில உடைகளை தவிர்த்து வறுமையும், வெறுமையும் எப்போதும் உடனிருந்தது,அப்போது swadesh என்ற ஹிந்தி படம் ரிலீஸ் ஆகிருந்தது,(இசை-ரகுமான்) அப்போது நானிருந்த சுழலில் பாடல் கேட்பதற்கோ, டிவி பார்பதற்கோ வாய்ப்பில்லை, அதனால் ஒரு நல்ல தியேட்டரில் படம்/பாடல்  பார்க்கலாமென்று  பெங்களூர் PVR -இல் சென்று பார்தேன்/கேட்டேன்(120 ரூபாய் டிக்கெட்).  படம் அவ்வளவு ஈர்கவில்லை, அனால் பாடல்கள் ரசிக்ககூடியதாக இருந்தது,
படம் முடிந்த பின்இந்த தொகுப்பில் என்னபுதுமை என்று யோசித்த போது, படத்தில் முதல் பாடலில் (  Yun Hi Chala Chal ) ஷாருக் தன் சொந்த  ஊருக்கு செல்லும் வழியில் ஒரு வழிபோக்கனை தன் வாகனத்தில் அழைத்து செல்லுவார். அப்போது ஷாருக் உதித் நாராயண் குரலிலும் , வழிபோக்கன் ஒரு வித்தியாசமான குரலிலும் பாட கேட்டேன்,
பொதுவாக நாம் சினிமாவில் கேட்கும் குரல்கள் வழவழபாக, பிசிறற்ற குரலாகதான் இருக்கும். ஆனால் இதற்கு எதிர்மறையான இசை / குரல் சினிமாவில் கேட்பது மிகஅரிது,அப்படிப்பட்ட ஆளுமைகள் அமைத்தாலும் அவைகளை சிறப்பாக பயன்படுத்துவது மிக மிக  அரிது. இந்த பாடலின் குரல் அப்படிபட்ட தனி தன்மை கொண்ட குரலாக எனக்குபட்டது,  சில மாதத்திற்குபின் நண்பர்கள் உதயன் , ப்ரேம் உடன்  இந்திரா நகரில் உள்ள ஒரு தியேட்டரில்  Mangal பண்டே (இசை : ரகுமான் ) படம் பார்க்க சென்றேன். படம்முடிந்து வெளி வந்த பின்னும் "மங்கள.... மங்கள..." என்ற பாடல் மீண்டும் மீண்டும் எனக்குள் கேட்டு கொண்டே இருந்தது காரணம் swadesh பாடலில் கேட்ட அதே  வித்தியாசமான குரலின் ஈர்ப்பு.
மொழி எல்லைகளை கடந்து பாடல் கேட்கவும் பழகி இருந்ததால், பீகார், ஒரிசா, பெங்கால் தொழிலாளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் வசித்த சமயங்களில் வட பிராந்திய நாட்டுப்புற பாடல்கள் கேட்டு ரசித்து இருகிறேன்.
என் அறையில் என்னுடன் தங்கி இருந்த மராத்தி ஒருவர் மராத்திய நாட்டு புறபாடல்களை பாடுவதில் ஆர்வம் உள்ளவர், அவரிடம் "மங்கள.... மங்கள..."  பாடலின் பாடகரை பற்றி பேசும்போது, அவர் பெயர்கைலாஷ் க்ஹெர்என்றும் வடஇந்திய நாட்டு புற, சுபி இசை பாடல்களை பாடுவதில் புகழ் பெற்றவரென்றும் எனக்கும் அவர் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றும் சொன்னார்.
பின்னர்  இணையத்துடன் இணக்கமாக இருந்த காலங்களில் அவரால் பாடப்பட்ட பல பாடல்களை கேட்டேன். 1973 - ல் மீரட்டில் பிறந்த இவர் வியாபார தோல்வி கண்டபின் இசை துறைக்கு வந்தாராம், 2002 ல் Andaaz என்ற படத்தில் முதல் பாடல் பாடினார்.
ஆனால் Waisa Bhi  Hota Hai என்ற படத்தில் இவர் பாடிய Allah ke Bande என்ற பாடல் மூலம் தான்  இவர் குரல் இந்தியா முழுவதும் காற்றில் பரவியது. 'Teri Deewani ' என்ற இவரது குழுவின் ஆல்பமும் சிறந்த வெற்றி பெற்றது. 'டெல்லி-6 ' படத்தில் 'Arziyan ' என்ற அதிஅற்புதமான 
sufi  பாடலை பாடியதில் kailash kher  குரலும் ஒன்று.
வெயில் (தமிழ்) படத்தில் 'வெயிலோடு விளையாடி......'-யது  இவர் குரல்.


அவரின் சில பாடல்களை கீழ்கானும் சில சுட்டியில் கேட்கலாம், இவைகளை அலுவலக அவசரத்திலோ, மொழியை முதன்மைபடுத்தியோ, வழக்கமான டூயட் பாடல் அளவுகோலுடனோ ஒப்பிடாமல் கேட்டுபாருங்கள்.


Allah ke Bande - (Link)
Teri Deewani- (Link)
Stage Program - (Link)
Delhi-6  - (Link) 
Saaiya - Album - (Link)
Tauba Tauba -Album - (Link)
Yaarabba -Album - (Link)
Mangal pande -(Link)