ஆனால் இது Highway ஆல்பத்திற்கான promo-song தான், படத்தின் பாடல் யார் பாடியிருப்பார்கள்? முழுத்தொகுப்பு வந்ததும் ஆர்வமுடன் முதலில் கேட்டது "Pathaka Kudi" தான், ஜோதி நூரன், சுல்தானா நூரன் ( Nooran Sisters ) என்ற இரட்டையர்கள் அவ்வளவு எளிதில் நமக்கு கேட்க கிடைக்காத அட்டகாசமான காத்திரக்குரலில் பாடியிருந்தார்கள். பஞ்சாப்பின் ஜலந்தரை பூர்வீகமாக "உஸ்தாத் குல்ஷன் மீர்" என்ற சூபி /கவ்வாலி இசை கலைஞரின் மகள்கள்தான் நூரன் சகோதரிகள், இசைக்குடும்ப பின்னணி என்பதால் சிறுவயதிலிருந் தே இசையிலும், பாடலிலுமே நாளும்பொழுதும் ஊறிக்கிடந்திருக்கிறார்கள் . தந்தை யிடமே இசை பயின்று வடநாட்டு கவ்வாலி-நாட்டுப்புற இசை மேடைகளை அதிரவிட்டுக்கொண்டிருக்கும்போது முதல் சினிமா வாய்ப்பாக அமைந்தது "Pathaka Kudi", இந்த இடத்தில் உங்களுக்கு வேறு வழியே இல்லை பாடலை கேட்டேயாகவேண்டும்.
இவர்களின் எண்ணற்ற மேடைப்பாடல்கள் இணையத்தில் காணக்கிடைத்தாலும், இக்கட்டுரையின் காரணப்பாடலாக "டாக்கா" வில் நடந்த மேடை நிகழ்ச்சியொன்றில் காணொளி கீழே தந்திருக்கிறன் கட்டாயம் கேளுங்கள், இசைநிகழ்த்தும்போது பாடலுக்கேற்ப உடல்மொழியும், குரல்தெறிப்புக்கு ஏற்ற கை கொட்டலும் வேறு மேடை பாடகர்களிடம் காணமுடியாது. பாடல் உச்சம் நெருங்க... நெருங்க நிலம்பிளக்கும் குரல்கொண்ட இசை ராட்சசிகளாகவே மாறிப்போய்விடுகிறார்கள்.
கமலி SONG
Mirchi Award
யா. பிலால் ராஜா
உண்மைதான் ராஜா.
ReplyDeleteநன்றி.