Atif Aslam
மூன்றாண்டுகளுக்கு முன்பு ஓர்நாள், ஊரிலிருந்து தொலைபேசி அழைப்பு
"மாப்ள உங்களுக்கு ரெண்டாவது பையன் பொறந்துருக்கான் , ஊருக்கு கெளம்பி வாங்க ...."
"வரும்போது என்ன பேருனு யோசிச்சுட்டு வாங்க...."
யோசிக்காமல் சொன்னேன்
"யோசிச்சாச்சு மாமா ....Atif Aslam ...."
"யோசிச்சாச்சு மாமா ....Atif Aslam ...."
சில ஆண்டுகளுக்கு முன் தேடித்தேடி சூபி, குவாலி இசை வகைகளை கேட்டு பித்தேறி போயிருந்தேன், ரஹ்மானின் சூபித்தனமான இசையை உள்வாங்கியிருந்ததால் வந்த தொடர்வினை. ஒரு போதை அடிமையைப்போல் ஓய்வான பின்னிரவுகளில் தியானிப்பது இவ்வகை இசையோடுதான். எண்ணற்ற பாடல்களை கேட்டுக்கடக்கும்போது ஒரு நாள்ஒரு பாடல் என்னை நிறுத்தியது, பாடகரின் குரல் வளம், வீச்சு அபாரமாயிருந்தது மீண்
எல்லை தாண்டிய இந்த இசைபயங்கரவாதிக்கு Indo - pak பரப்பு முழுவதும் பெரும் ரசிகர் உண்டெனினும், இவரின் தற்போதைய சோகம் என்ன தெரியுமா? "பிற்போக்கு போலி தேசியவாதிகள் " பாகிஸ்தானிலிருந்து எந்த இசை கலைஞர்களும் இந்தியா வந்து பாடவோ நிகழ்ச்சியில் பங்கெடுக்கவோ கூடாதென கோஷமிட்டதில் மீண்டும் பாக்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
அந்த பாடல் வடிவமைப்பில் வழக்கமான பல்லவியில் துவங்கி சரணத்தில் முடியவடையும் என எதிர்பார்க்க முடியாது, Atif Aslam- ன் அபாரமான "ஆலாப்" ராகமிடும் திறனில் நம்பிக்கைகொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். கீழ் சொன்னபடிதான் கேட்கவேண்டுமென்பதில்லை, ஒருவேளை இந்த இசையின் மாயாக்கதவினை திறக்க இது உதவலாம். (தேவைப்படுபவர்கள் மட்டும் Bacardi (Limon) ஒரு மடங்கு மூன்று மடங்கு தண்ணீருடன் நான்கு சொட்டு எலுமிச்சை சாற்றினை விட்டெடுத்துக்கொண்டு)நிச்சயம் முழு அமைதி கொண்ட ஒரு ஓய்வின் இரவில், கேட்பு புலன் தவிர அனைத்தையும் ஓய்வு நிலையிலிட்டு
நல்லதொரு ஒலிக்கருவி கொண்டு ஒரு பாடலுக்குரிய வழக்கமான வடிவம் மறந்து, முன்று முறை தொடந்து கேட்டாலே போதும், உங்களுக்குள் அந்த பாடல் ஓடி அடங்க நிச்சயம் சில காலம் பிடிக்கும்.
யா. பிலால் ராஜா