நம்முடைய இசைகேட்பு கொண்டாட்டம் பெரும்பாலும் இந்திய திரைஇசை தொகுப்பை சார்ந்திருப்பதில் தவறோன்றுமில்லைதான், இந்தியாவில் வெகுஜன இசைக்கான பொதுத்தளம் சினிமாதான். இந்தியாவை பொறுத்தவரை திரைப்படம் சாராத இசைத்தொகுப்போ, இசைக்குழுக்களோ (Music Band ) திரைஇசைக்கு நிகரான இடத்தை பிரபலத்திலும்,வணிகவெளியிலும் எட்டிப்பிடிக்க முடியவில்லை. அப்படி ஏதோ ஒரு இசைகுழு வெடித்துக்கிளம்பி வெளிவந்தாலும் மிக சொற்பகாலத்திற்குள் காணாமல் போய்விடுவார்கள், அல்லது அந்தக்குழு கலைந்து போய்விடுகிறது. வடஇந்தியாவிலாவது சினிமா இசைஅமைப்பாளர்களுக்கு இணையாக தளார் மொஹந்தி , அபாச்சி இந்தியன், பாபா சேகல் 90களில் புகழ்பெற்றார்கள், தெற்கே அந்த அளவிற்கு எந்த ஒரு
ஆளுமையோ இசைகுழுக்களோ நிலைபெறவில்லை.சமீபகாலமாக நான் கேட்கும் பாடல்களும் இசைத்தொகுப்பும் எந்தவித புதுமையும், மனஎழுச்சியையும் எனக்குள் கடத்தவில்லை ("கடல்" தொகுப்பு தவிர்த்து), இசை கேட்பில்ஒரு வறண்ட வானிலை நிலவும் சமயத்தில்தான் தற்செயலாக இணையத்தில் Thaikudam bridge என்ற Rock Band ன் "Fish Rock" பாடலை கேட்டேன், மலையாள பாடலென்றாலும் அட்டகாசமாக வடிவமைத்திருந்தார்கள் அக்குழுவின் இன்னும் சில பாடல்களை தேடிக்கேட்டேன், அற்புதமான Music Band அக Thaikkudam Bridge உருவெடுத்துள்ளனர், அதிலும் கேரளாவில் இப்படி ஒரு Rock band உருவெடுத்து மேடை நிகழ்வுகளை நடத்தி வருவது பிரமிப்பானது. பொதுவாக Rock இசை வடிவம் முற்றிலும் மேற்கத்தியபாணி என்பதால் இது இந்திய இசைவடிவ நுகர்வோரை திருப்தி செய்யாது இவர்களை போல் Rock இசையை அடிப்படையாக கொண்ட
பல குழுக்கள் இங்கிருந்தாலும், இவர்கள் Rock -ஐ தேர்ந்த கலப்பிசை (fusion ) வடிவில் அமைப்பதுதான் இந்த வெற்றிக்கு காரணம். Thaikkudam Bridge எனபது கொச்சினில் இந்த குழுவினர் தங்கியிருந்த இடத்தின் பெயரென்பதால் அதனையே இந்த Band ன் பெயராக வைத்திருக்கிறார்கள்.
ஆளு
பல குழுக்கள் இங்கிருந்தாலும், இவர்கள் Rock -ஐ தேர்ந்த கலப்பிசை (fusion ) வடிவில் அமைப்பதுதான் இந்த வெற்றிக்கு காரணம். Thaikkudam Bridge எனபது கொச்சினில் இந்த குழுவினர் தங்கியிருந்த இடத்தின் பெயரென்பதால் அதனையே இந்த Band ன் பெயராக வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் இணையத்தில் பதிவேற்றியுள்ள இசைபதிவுகள் ஒளி
Fish Rock
இந்த குழு பழைய மலையாள திரைப்படபாடல்களைதான் பெரும்பாலும் ரீமிக்ஸ் செய்து பாடிக்கொண்டிருந்தார்கள், பின் அவர்களாகவே மெட்டமைத்து சில பாடல்களை தொலைகாட்சி மற்றும் மேடைகளில் நிகழ்த்தினார்கள். "Fish Rock" என்ற இந்த பாடல்தான் அவர்களுக்கு புகழை துவக்கிவைத்து. வயலின் இசையுடன் பாடலும் பாடுகின்ற கோவிந்த் மேனன் தான் இந்த Thaikkudam Bridge குழுவின் பிரதான தலைவர் மற்றும் மெட்டமைப்பபாளர், Vian Fernandaz என்ற Bass Guitarrist இந்த பாடலில் இன்னொரு நாயகன். கிட்டாரை இவரின் விரல் மட்டுமல்ல, தோள் கடந்து புரளும் கூந்தலும் வந்து வாசித்துவிட்டு போகும்போல, வாசிக்கும் பொழுது அப்படி ஒரு உற்சாக துள்ளல் இவரிடம். பாடலின் துவக்கம் முதல் இறுதிவரை உற்சாகத்தீ பார்ப்பவர் அனைவரின்மீதும் பற்றியெரியும். இந்த கட்டுரையை வாசிப்பவர்கள் தவறவிடக்கூடாத பாடல் இதுவென்பேன்.
Appozum
இது பழைய மலையாள பாடலின் (Kadamba) நவீன வடிவம் இதன் பிரதான பாடகர் பிதாம்பரன், இவர் கோவிந்த் மேனனின் தந்தை இந்த இசைக்குழு உருவாக்கத்திற்கு முக்கிய ஊக்கம் இவருடையதுதான், இவைகளெல்லாம் மலையாள மொழியில் பாடப்பட்டாலும், இவர்களின் Music Present style கேட்பவரை நிச்சயம் Replay-க்க வைக்கும் .
youtube link for better video
சூபி/குவாலி வகை பாடலை இப்படி ஒரு நவீன வடிவில் கேட்டதே இல்லை, குவாலி இசையில் ஹார்மோனியத்தை தவிர்க்கவே முடியாது, நவீன சூபி இசை பாடலில் உச்சம் தொட்ட ரஹ்மான் கூட அவரின் பாடலில் ஹர்மோனியா இசையை பொதித்தே வைத்திருப்பார். ஆனால் இதில் Hollow Guitar, வயலினை மட்டும் பிரதானமாக கொண்டு மெட்டமைக்கப்பட்டிருகிறது, கிருஷ்ணன் , நிலா மாதவ் இருவரும் பாடியிருக்கிறார்கள், அதிலும் கிருஷ்ணன் படிய பல்லவியை படியெடுத்து தொடரும் நிலா மாதவ் குரல் அனைத்து scal -ஐயும் அனாசயமாக கடக்கிறது. இடையில் 2.04 - 2.50 கணத்தில் இசையை நீங்கள் மறுமுறை கேட்டே ஆகவேண்டும்.
ஒரு சிறு நீரோடையை பின் தொடர்ந்து செல்கிறீர்கள் சில கணத்திற்க்குப்பின் எதிர்பாராமல் நீர் பெருக்கெடுத்து ஒரு அருவியாய் உருவெடுத்தால் எப்படிஇருக்கும், அத்தகையது இப்பாடல். அர்த்தம் புரிகிறதோ இல்லையோ மலையாள மொழி உச்சரிப்பே ஒரு இசை லயம் கொண்டதுதான். மெல்லிய மலையாள மெட்டுடன் துவங்கி Guitar, Violen, Drums, Keyboard -ல் இசை தீயாய் பற்றியெரிந்த பின்தான் அணைகிறது. முதல் பல்லவி துவக்கிவைக்கும் பாடகர் சித்தார்த் மேனன், கிருஷ்ணன் மேனனின் சகோதரர் மற்றும் சென்னையில் ரஹ்மானின்
KM Music conservatory இசைக்கல்லூரியில் இசை பயின்றவர்.
இந்த இரு பாடல்களும் திரு. இளையராஜா, ரஹ்மானின் மெல்லிசைகளை அற்புதமாக ரீமேக் செய்திருக்கிறார்கள். பொதுவாக சொல்வதற்காக ரீமேக் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். இவைகள் "cover song" என்று தான் தற்போது அழைக்கப்படுகிறது.
(வாய்ப்பிருந்தால் இணையத்தில் உலவும் சில அற்புதமான "cover songs" பற்றி தனியாக ஒரு கட்டுரை பதிவிடுவேன்)
(வாய்ப்பிருந்தால் இணையத்தில் உலவும் சில அற்புதமான "cover songs" பற்றி தனியாக ஒரு கட்டுரை பதிவிடுவேன்)
வேகம்
சில மலையாள திரைப்படங்களுக்கும் பாடல் செய்துள்ளார்கள், வேகம் என்ற மலையாள படத்தின் " Theme song"